பக்கம் எண் :

முதற் காண்டம்124

ஆயினான் நடந்த தன்மை ஆண்டகை உவப்பில் ஓர் நாள்
"வீயினால் நிகர்ந்த எச்சம் இடை முறை பலவும் போய் ஓர்
சேயினால் நயப்பச் செய்வேன், சிறந்த மூஉலகில் அன்னான்
வாயினால் நவிலாக் கோன்மை வரம் பெற அளிப்பேன்" என்றான்.

     இவ்வாறெல்லாம் அமைந்த அவன் வாழ்க்கை நடத்திய தன்மையால்
ஆண்டவன் மகிழ்ச்சியோடு ஒரு நாள் அவனுக்குத் தோன்றி, "மலரை ஒத்த
உன் சந்ததி இடையே பல தலைமுறை கழிந்தபின் ஒரு மகனால் மகிழச்
செய்வேன். சிறந்த மூன்று உலகங்களிலும் வாயினால் சொல்ல இயலாத
ஆட்சியுரிமையை அவன் பெற வரம் அளிப்பேன்" என்றான்.

               வாக்குறுதியின் வழித் தோன்றல்
 
                   39
தந்தவிவ் வரமின் னான்றன் சந்ததி முறையிற் சேயாய்
வந்ததற் பரனா லாய வளப்பமென் றாலு மென்ற
விந்தநன் முறையான் மைந்த னியல்பொடு தேவ னென்பா
னந்தர முதலி யாண்டு மாள்வது மரிய பாலோ.
 
தந்த இவ் வரம் இன்னான் தன் சந்ததி முறையில் சேய் ஆய்
வந்த தற்பரனால் ஆய வளப்பம் என்றாலும், என்ற
இந்த நல் முறையால், மைந்தன் இயல்பொடு தேவன் என்பான்
அந்தரம் முதல் யாண்டும் ஆள்வதும் அரிய பாலோ?

     கடவுள் தாவிதனுக்குத் தந்த இந்த வரம் இவனது சந்ததி முறையில்
மகனாய் வந்த ஆண்டவனால் ஆகிய நிறைவேற்றம் என்று
சொல்லலாமாயினும், முன்னால் கூறப்பட்ட இந்த நல்ல முறையில், மனித
இயல்போடு தேவனும் ஆகிய அவ்வாண்டவன் வானம் முதல் எவ்வுலகும்
ஆள்வதென்பதும் அவனுக்கு அரிய தன்மை ஆகுமோ?

     தந்தை, மகன், தூய ஆவி என்னும் மூன்றாட்களாயினும் ஒரே
கடவுளாய், ஒவ்வோர் ஆளும் தன்னிறைவு கொண்ட கடவுளாகையில்
அத்தெய்வ இயல்போடு மானிட இயல்பும் பொருந்தக் கொண்டு பிறந்த
மகனாங் கடவுள் தன்னியல்பாக மூவுலக் காட்சியைக் கொண்டிருக்க,
அது வரத்தால் அமைய