வேண்டுவதொன்று அன்று
என்பது கருத்து. இது, வரம் நிறைவேற மற்றொரு
மகன் வேண்டுமென்பதற்குக் காரணங் கூறியவாறு ஆயிற்று. தற்பரன்
என்பது, தன்னை ஆக்குவோன் இன்றித் தன்னியல்பாக என்றும் நிற்கும்
ஆண்டவன் என்று பொருள்படும்.
40 |
கோன்மையா
லுயர்ந்த தாவிற் கோத்திரத் துதிக்குந் தெய்வ
மேன்மையா லொருவ னன்றி விபுலையிற் பிறக்கு மாக்கட்
பான்மையி லுயிர்த்த மைந்தன் பாரொடு வானு மாள
நான்மையால் வழுவாச் செங்கோல் நல்கவுள் ளினனா நாதன். |
|
கோன்மையால்
உயர்ந்த தாவின் கோத்திரத்து உதிக்கும் தெய்வ
மேன்மையால் ஒருவன் அன்றி, விபுலையில் பிறக்கும் மாக்கட்
பான்மையில் உயிர்த்த மைந்தன் பாரொடு வானும் ஆள,
நான்மையால் வழுவாச் செங்கோல் நல்க உள்ளினன் ஆம் நாதன். |
ஆட்சி முறையால்
உயர்ந்த தாவிதனின் குடியில் தோன்றும் தெய்வ
மேன்மையால் அமைந்த ஒருவனுமன்றி, உலகில் இயல்பாகப் பிறக்கும்
மக்கள் தன்மை மட்டும் கொண்டு தோன்றிய மகன் ஒருவனும்
மண்ணுலகத்தோடு வானுலகத்தையும் ஆளுமாறு, நால்வகைக் குற்றங்களாலும்
வழுவாத செங்கோல் அவனுக்குக் கொடுக்கவும் ஆண்டவன் நினைத்தான்
ஆகும்.
'ஆம்' என்றது
அவ்வரம் அளித்தபோது ஆண்டவன் இதனைக்
கருதியிருக்க வேண்டுமென்று கொள்ளக்கிடந்தமை குறித்தது. அதற்கான
காரணம் முந்திய பாடலில் விளக்கப்பட்டது. நால்வகைக் குற்றங்கள்: காமம்,
வெகுளி, மயக்கம், அகங்காரம். தாவின் - 'தாவிதன்' என்ற சொல்லின்
இடைக்குறை.
41 |
உள்ளின
தெல்லா முள்ளு முறுதியா லாக்கும் வல்லோ
னெள்ளின தெல்லா நீக்கு மியல்பொடு தாவி தன்றன்
வள்ளின முறையிற் சேயாய் வந்துமூ வுலக மாள
நள்ளின வளங்கொள் சூசை நயத்தொடு தெரிந்திட் டானே. |
|