பக்கம் எண் :

முதற் காண்டம்126

உள்ளினது எல்லாம் உள்ளும் உறுதியால் ஆக்கும் வல்லோன்,
எள்ளினது எல்லாம் நீக்கும் இயல்போடு, தாவிதன் தன்
வள் இன முறையில் சேய் ஆய் வந்து மூ உலகம் ஆள
நள்ளின வளம் கொள் ஆசை நயத்தொடு தெரிந்திட்டானே.

     நினைத்தலின் உறுதியால் நினைத்ததெல்லாம் ஆக்கும் வல்லமை
கொண்ட ஆண்டவன், இகழத்தக்கதெல்லாம் நீக்கும் தன் இயல்புக்கு
ஏற்றவாறு, தாவிதனின் வளமான குல முறையில் மகனாய் வந்து மூன்று
உலகங்களையும் ஆளுமாறு, செறிந்த வரங்களின் வளம் கொண்ட சூசையை
இன்பத்தோடு தெரிந்து கொண்டான்.

     'நள்ளின வளம் கொள் சூசை' என்றது 'வளன்' என்ற பெயர்க்
காரணமும் குறிப்பாய் உணர்த்தும்.
 
                      42
ஏற்றிய முறையோ டெந்தை யியன்றதன் வலிமை காட்டப்
போற்றிய வரங்கொ டெங்கும் பொருநனாய்த் தெரிந்த சூசை
சாற்றிய கோத்தி ரத்தின் றலைமுறை வழுவா தேனு
மாற்றிய திருபொன் றின்றி வறுமையான் பிறக்கச் செய்தான்
 
ஏற்றிய முறையோடு, எந்தை, இயன்ற தன் வலிமைகாட்ட
போற்றிய வரம் கொடு எங்கும் பொருநனாய்த் தெரிந்த சூசை,
சாற்றிய கோத்திரத்தின் தலைமுறை வழுவாதேனும்,
மாற்றிய திரு ஒன்று இன்றி வறுமையான் பிறக்கச் செய்தான்

     எம் தந்தையாகிய ஆண்டவன், உயர்த்திய தன்மைக்கு ஏற்பப்
போற்றத் தக்க வரங்களைக் கொண்டு எவ்வுலகிற்கும் அரசனாகத் தெரிந்து
கொண்ட சூசை, முன் கூறிய தாவிதனின் குடித் தலைமுறையில் வழுவாது
பிறந்தானெனினும், தன்னிடம் பொருந்தியுள்ள வலிமையை உலகிற்குக்
காட்டுமாறு, பரம்பரையாய்க் கைம்மாறி வரவேண்டிய செல்வம் ஒன்றுமே
இல்லாத வறுமையாளனாய் அவனைப் பிறக்கச் செய்தான்.

                       43
பொய்ப்படு முலக வாழ்வின் பொருட்டிலா மிடிமை யோடு
கைப்படு முழைப்பி லுண்டி காணவந் துதித்த வில்லான்
மெய்ப்படு மறத்தி னாண்மை விளங்கிய முறையிற் பின்ன
ரைப்படும் விசும்பொ டெங்கு மாரனாய் வணங்கச்
                                  செய்தான்.