பொய்ப் படும்
உலக வாழ்வின் பொருட்டு இலாமிடிமையோடு,
கைப் படும் உழைப்பில் உண்டி காண வந்து உதித்த இல்லான்,
மெய்ப்படும் அறத்தின் ஆண்மை விளங்கிய முறையின், பின்னர்
ஐப் படும் விசும்பொடு எங்கும் அரசனாய் வணங்கச் செய்தான். |
பொய்யான
உலக வாழ்க்கையை முன்னிட்டு வேண்டிய பொருள்
இல்லாத வறுமையோடு, தன் கையால் செய்யும் உழைப்பின் மூலமே உணவு
தேடும் தன்மையாய் வந்து தோன்றிய வறியவனாகிய சூசையை, உண்மையான
புண்ணியத்தின் வீரம் அவனிடம் விளங்கிய அடிப்படையில், அழகு
பொருந்திய வானுகத்தோடு எவ்வுலகும் அரசனாய் அவனை வணங்குமாறு
அவ்வாண்டவனே செய்தான்.
மாசு
களைந்த கருப்பம்
- விளம், -விளம்,
-மா, கூவிளம்
44 |
நூனிலங்
காட்சியா னுனித்த காலுணர்
மீனிலங் கடந்தெலா மாளும் வேந்துதான்
றேனிலங் கருணையாற் றெளித்த வெல்வையிற்
கானிலந் தவத்தினாற் கருப்ப மாயதே. |
|
நூல்
நிலம் காட்சியால் நுனித்த கால் உணர்
மீன் நிலம் கடந்து எலாம் ஆளும் வேந்து தான்
தேனில் அம் கருணையால் தெளிந்த எல்வையில்,
கான் நிலம் தவத்தினால் கருப்பம் ஆயதே. |
வேத நூலுக்கு
நிலைக்களனாகிய தெய்வக் காட்சியால்
ஒவ்வொன்றிற்கும் கருதிய காலத்தை உணர்ந்தவனாய், விண்மீன்
உலகத்தையும் கடந்து நின்று எல்லாவற்றையும் ஆளும் அரசனாகிய
ஆண்டவன், தேனிலும் இனிய கருணையால் தான் தெளிந்து குறித்த
சமயத்தில், தெய்வ மணத்திற்கு நிலைக்களனாய்ப் பெற்றோர் செய்த
தவத்தின் பயனாகக் கருப்பம் உண்டாகியது.
|