47 |
தாரொடு
சனித்ததேன் றன்மை யோவளை
யேரொடு கொண்டமுத் திலங்குந் தன்மையோ
நீரொடு மைந்துதம் பகையை நீத்தொரு
சீரொடு வேற்றில சிறந்த சூலதே. |
|
தாரொடு
சனித்த தேன் தன்மையோ? வளை
ஏரொடு கொண்ட முத்து இலங்கும் தன்மையோ,
நீரொடும் ஐந்து தம் பகையை நீத்து, ஒரு
சீரொடு, வேற்று இல சிறந்த சூல் அதே? |
நீரோடும்
ஐந்து பூதங்கள் தம் பகையை நீக்கி ஒரு சீராய் இணைந்து,
வேற்றுமை இல்லாமல் சிறந்து அமைந்த அந்தக் கருப்பம், மாலையின்
மலரோடு பிறந்த தேனின் தன்மை என்போமோ? சங்கு அழகோடு சூல்
கொண்ட முத்து உள்ளிருந்து ஒளிரும் தன்மை என்போமோ?
ஐம்பூதச் சேர்க்கையால்
ஆனது உடம்பு. அவை பகை இல்லாமல்
சேர்ந்த உடம்பு அழகாலும் குணத்தாலும் சிறந்து விளங்கும். இதே கருத்து
ஷேக்ஸ்பியரின் (ஜுலியஸ் 5.3.68_) நாடகத்திலும் காண்க. ஐம்பூதங்கள்:
நிலம் (பிருதுவி) நீர் (அப்பு), நெருப்பு (தேயு), வளி (வாயு), வெளி
(ஆகாசம்). வேற்று - வேற்றுமை என்பதன் கடைக்குறை.
48 |
அறைவளர்
மனையினு ளரசன் புக்கென
விறைவள ரன்பினோ ருயிரி யற்றிவெண்
பிறைவளர் நலமென வளர்ந்த பீளுள
சிறைவள ருடலினுட் செலுத்தி னானரோ. |
|
அறை
வளர் மனையினுள் அரசன் புக்கு என,
இறை வளர் அன்பின் ஓர் உயிர் இயற்றி, வெண்
பிறை வளர் நலமென வளர்ந்த பீள் உள
சிறை வளர் உடலினுள் செலுத்தினான் அரோ. |
அறை வீடுகள்
நிறைந்துள்ள ஒரு மாளிகையுள் அரசன் புகுந்தது
போல், ஆண்டவன் மிகுந்த அன்போடு ஓர் உயிரைப் படைத்து, வெண்
|