புரப்ப ஓர் பொது
முறை பொறாத தன்மையால்,
கருப்பம் ஓர் எழு மதி கடக்கும் முன் வினை
பரிப்ப ஓர் சிறப்பு அருட் பயத்தின் சூல் செயிர்
விருப்பமோடு இறையவன் விலக்கினான் அரோ. |
அப்பாவத்தினின்று
சூசையைக் காக்க ஒரு பொது முறை பொறாது
என்பதால், கருப்பம் ஓர் ஏழு மாதம் கடக்குமுன் அவ்வினையை
அறுத்தொழிக்கவென்று ஒரு சிறப்பான திருவருட் பயனால் ஆண்டவன்
சூலோடு அமைந்த அப்பாவத்தை விருப்பத்தோடு சூசையிடமிருந்து
நீக்கினான்.
'அரோ' அசைநிலை:
51 |
தீயவை
விலக்கிய சிறப்பிற் றேவருட்
டூயவை பதிவரத் தொகையிற் சூலிடத்
தாயவை யறிந்தில ளளவி லுண்மகிழ்
தாயவள் வியப்புறீஇத் தளர்வற் றோங்கினாள். |
|
தீயவை
விலக்கிய சிறப்பின், தேவு அருள்
தூயவை பதி வரத் தொகையின் சூல் இடத்து
ஆயவை அறிந்திலள், அளவுஇல் உள் மகிழ்
தாய் அவள் வியப்பு உறீஇ, தளர்வு அற்று ஓங்கினாள். |
கருவினைப்
பாவத்தோடு தொடர்ந்த தீயவற்றை யெல்லாம் நீக்கிய
சிறப்பினோடு, தெய்வ அருளால் தூயனவாகப் பதிந்த வரங்களின்
தொகையால் தன் கருப்பத்தினுள் நிகழ்ந்தவற்றை அறியாதவளாய், அளவில்லாது உள்ளம்
மகிழ்ந்த தாயாகிய நீப்பி என்பவள் வியப்படைந்து,
தளர்வு நீங்கி எழுச்சி கொண்டாள்:
52 |
தேன்முகம்
புதைத்த சூல் செறித்த சீர்கொடு
கான்முகம் புதைத்தவிழ் கமலப் பூவெனச்
சூன்முகம் புதைத்தசீர்த் தொகைபு றப்படத்
தான்முகம் புதைத்தொளி தயங்குந் தாயரோ. |
|
தேன்
முகம் புதைத்த சூல் செறித்த சீர் கொடு
கான் முகம் புதைத்து அவிழ் கமலப் பூ என,
சூல் முகம் புதைத்த சீர்த் தொகை புறப்பட,
தான் முகம் புதைத்து ஒளி தயங்கும் தாய் அரோ. |
|