54 |
கண்டா
ரெவருமுளத் துவப்ப மேலோர் கனியின்பங்
கொண்டா ரருள்பொறித்த முகத்தின் மாமை கொழித்தகதி
ருண்டார் தெளிவுண்டார் கடவு டன்றாட் குவகைசெயுந்
தண்டா ரிவனாவா னென்ன வாழ்த்திச் சயஞ்சொன்னார். |
|
கண்டார்
எவரும் உளத்து உவப்ப மேல் ஓர் கனி இன்பம்
கொண்டார்; அருள் பொறித்த முகத்தின் மாமை கொழித்த கதிர்
உண்டார்; தெளிவு உண்டார்: "கடவுள் தன் தாட்கு உவகை செயும்
தண் தார் இவன் ஆவான்", என்ன வாழ்த்திச் சயம் சொன்னார். |
குழந்தையைக்
கண்டவர் யாவரும் உள்ளத்தில் மகிழ்ச்சியும் மேலான
ஓர் இன்பமும் கொண்டனர்; தெய்வ அருள் பொறிக்கப்பட்ட முகத்தின்
அழகு வீசிய கதிரை உண்டனர்; தெளிவு கொண்டனர்: "இவன் கடவுளின்
திருவடிகட்கு மகிழ்ச்சியூட்டும் குளிர்ந்த மாலை போல் ஆவான்", என்று
வாழ்த்தி வெற்றி கூறினர்.
55
|
மாசை
மிக்கநிற மணியின் சாயல் மகனோக்கி
யாசை மிக்ககனி யீன்றாள் கற்றோ ரருந்தொடைப்பா
வோசை மிக்கவறத் தொகையின் பீடத்துயர்வளர்க
சூசை யென்றவனை யேந்தி யெந்தை தொழுகின்றாள். |
|
மாசை
மிக்க நிற மணியின் சாயல் மகன் நோக்கி,
ஆசை மிக்க கனி ஈன்றாள், "கற்றோர் அருந் தொடைப்பா
ஓசை மிக்க அறத் தொகையின் பீடத்து உயர் வளர்க,
சூசை!" என்று அவனை ஏந்தி, எந்தை தொழுகின்றாள். |
ஆசை மிக்க
கனி போன்ற அம்மகனைப் பெற்றவள், பொன்னினும்
மிக்க நிறமும் மணியின் சாயலுமுள்ள மகனைக் கூர்ந்து நோக்கி, பின்
"சூசையே! கற்ற புலவர் இயற்றும் அரிய தொடையுறுப்புகள் கொண்ட
செய்யுளின் புகழோசையினும் மிகுந்த புண்ணியத் தொகையாகிய பீடத்தில்
உயர்ந்து வளர்வாயாக!" என்று வாழ்த்தி அவனைக் கைகளில் ஏந்தி நம்
தந்தையாகிய ஆண்டவனைத் தொழுகின்றாள்.
|