பக்கம் எண் :

முதற் காண்டம்134

     எனவே, தாய் இட்ட பெயர் சூசை என்றும், அதன் தமிழாக்கமே
வளன் என்றும் அறிக.
 
                    56   
எல்லின் கதிர்திரட்டித் திலகந் திங்கட் கிட்டதுபோல்
வில்லின் முகத்தின்றாய் மகனை யேந்தி விழைவுற்ற
சொல்லின் முகந்திறையோன் றாளைந் தாழ்ந்தித்
     
                               தோன்றலறத்
தல்லின் வேந்தனென வளர்தற் காசி யருள்கென்றாள்.
 
எல்லின் கதிர் திரட்டி, திலகம் திங்கட்கு இட்டது போல்,
வில்லின் முகத்து இன் தாய் மகனை ஏந்தி, விழைவு உற்ற
சொல்லின் முகத்து இறையோன் தாளைத் தாழ்ந்து, "இத்தோன்றல்
                                            அறத்து
அல்லின் வேந்தன் என வளர்தற்கு ஆசி அருள்க," என்றாள்.

     பகலவனின் கதிரைத் திரட்டிச் சந்திரனுக்குப் பொட்டு இட்டது
போல், ஒளி பொருந்திய முகமுள்ள இனிய தாய் தன் மகனை ஏந்தி,
விருப்பங் கொண்ட சொற்களின் மூலமாக ஆண்டவன் திருவடிகளைப்
பணிந்து, "இம்மகன் புண்ணியத்தில் இரவுக்கு அரசனாகிய சந்திரன் போல்
வளர்வதற்கு ஆசி அருள்வாயாக", என வேண்டினாள்.

     சந்திரன் தாய்க்கும், கதிரவனின் கதிரைத் திரட்டி இட்ட பொட்டு
அத்தாயின் கையிலுள்ள ஒளி பொருந்திய மகனுக்கும் உவமை. அருள்க
+ என்றாள் - 'அருள்க வென்றாள்' என வர வேண்டியது, 'அருள்கென்றாள்'
எனத் தொகுத்தல் விகாரம் கொண்டது.

                    57
வீடா வானலஞ்செய் நோக்கு நோக்கி விண்ணிறையோன்
கோடா வரத்தாசி செய்வான் மேலோர் குரல்தோன்றி
யாடா நிலையறத்தென் மார்பிற் றேம்பா வணியாவான்
வாடா வருண்மகனென் றம்பூ மாரி வழங்கிற்றே.
 
வீடா வான் நலம் செய் நோக்கு நோக்கி விண் இறையோன்
கோடா வரத்து ஆசி செய் வான் மேல் ஓர் குரல் தோன்றி,
"ஆடா நிலை அறத்து என் மார்பில் தேம்பா அணி ஆவான்
வாடா அருள் மகன்," என்று அம் பூ மாரி வழங்கிற்றே.