பக்கம் எண் :

முதற் காண்டம்135

     வானுலகத்து ஆண்டவன் முடியாத வானுலக நலங்களைச் செய்யும்
நோக்கத்தோடு அக்குழந்தையை நோக்கி, தவறாத வரத்தோடு ஆசி
வழங்கும் ஒரு குரல் வானத்தினின்று பிறந்து, "வாடாத அருள் கொண்ட
இம் மகன் அசையாத நிலையுள்ள அறத்தோடு என் மார்பில் வாடாத
மாலையாய் அமைவான்," என்று கூற, அழகிய மலர் மாரி பொழிந்தது.

     ஆண்டவன் செயல் குரலின் மேல் ஏற்றப்பட்டது.

                    58  
மைந்நூற் றெனக்கரும்பூங் குழலாள் வாய்ந்த மகனலங்கேட்
டெந்நூற் றிறத்தினுமே லடியின் வீழ்ச்சி யினிதியற்றி
மெய்ந்நூற் றிறத்தமறை முறையின் விள்ளா வினையெல்லாங்
கைந்நூற் றிறத்தறவோ ரியற்றி யாசி கனிந்துரைத்தார்.
 
மை நூற்று எனக் கரும் பூங் குழலாள் வாய்ந்த மகன் நலம் கேட்டு,
எந் நூல் திறத்தினும் மேல் அடியின் வீழ்ச்சி இனிது இயற்றி,
மெய் நூல் திறத்த மறை முறையின் விள்ளா வினை எல்லாம்
கை நூல் திறத்து அறவோர் இயற்றி ஆசி கனிந்து உரைத்தார்.

     மையினால் நூற்றது போன்ற கரிய அழகிய கூந்தலை உடையவளாகிய
நீப்பி தனக்கு வாய்ந்த மகனின் நலத்தை மேற்கூறியவாறு கேட்டறிந்து, எந்த
நூலின் திறமைக்கும் மேலான இறைவனின் பாதத்தில் விழுந்ந தொழுதலை
இனிது நிறைவேற்றினாள். அதனைத் தொடர்ந்து, உண்மையான நூலின்
அடிப்படையில் அமைந்த வேத முறையினின்று விலகாத சடங்குச்
செயல்களையெல்லாம் ஒழுக்க நூல் முறையில் தேர்ந்த அறவோராகிய
குருக்கள் நிறைவேற்றி, ஆசி மொழி கனிந்து கூறினர்.
 
                   59 
கூம்பா வணிமகற்குக் கணித மிக்கோர் கூறுபுக
ழோம்பா வணியாக வளைத்து நீக்கி யொருங்குடனோர்
சாம்பா வணியாக விரங்கி யெந்தை தான்புகழ்ந்த
தேம்பா வணியேயென் றணிமிக் கம்பூண் சேர்த்தினரே.