சூசையின் இளமைப்
பருவத்து மாண்புகளை எடுத்துக் கூறும் பகுதி.
குழவிப்
பருவம்
-மா, கூவிளம்,
-மா, கூவிளம்.
1
|
வான
டுத்தர சடைந்து வாழவக்
கோன டுத்தநற் குணத்த சீரெலா
மீன டுத்தவீ டுடைய விண்ணவர்
தேன டுத்தலர் சிறுவற் கூட்டினார். |
|
வான்
அடுத்து அரசு அடைந்து வாழ, அக்
கோன் அடுத்த நல் குணத்த சீர் எலாம்
மீன் அடுத்த வீடு உடைய விண்ணவர்
தேன் அடுத்து அலர் சிறுவற்கு ஊட்டினார். |
பிற்காலத்தில்
வானுலகம் சென்று அரசாட்சியும் அடைந்து என்றும்
வாழத் தக்கவாறு, அவ்வரசனுக்கு அடுத்த நல்ல குணத்தோடு பொருந்திய
சிறப்புக்களை யெல்லாம், தேன் போன்று இன்பம் மலர்கின்ற சிறுவனாகிய
சூசைக்கு, விண்மீன்கள் அடுத்துள்ள வான்வீட்டை உறைவிடமாகக்
கொண்ட வானவர் ஊட்டி வளர்த்தனர்.
2 |
ஊட்டி
னாரருள் முடியி னொப்பெனச்
சூட்டி னாரறஞ் சுடரும் பூணெனப்
பூட்டி னார்தவம் பொற்செங் கோலெனக்
காட்டி னாரறி வமைந்த காட்சியே. |
|