பக்கம் எண் :

முதற் காண்டம்139

ஊட்டினார் அருள்; முடியின் ஒப்பு எனச்
சூட்டினார் அறம்; சுடரும் பூண் எனப்
பூட்டினார் தவம்; பொற் செங்கோல் எனக்
காட்டினார் அறிவு அமைந்த காட்சியே.

     வானவர் அச்சிறுவனுக்குத் தெய்வ அருளை உணவாக ஊட்டினர்;
முடிக்கு ஒப்பாக அறத்தைச் சூட்டினர்; ஒளிரும் அணி போலத் தவத்தைப்
பூட்டினர்; பொன்னாலாகிய செங்கோல் போல அறிவோடு அமைந்த தெய்வக்
காட்சியைக் காட்டினர்.

     'ஊட்டினார்' என்ற குறிப்பினால் 'அருள்' உணவுக்கு ஒப்பாயிற்று.
 
               3       
இளைய வான்பிறை யெனவ ளர்ந்துளம்
வளைய மாசுறா வயது மூன்றுளா
னுளைய நூலவ ருற்ற காட்சியிற்
றிளைய வானறி வெய்திச் சீர்த்தனன்.
 
இளைய வான் பிறை என வளர்ந்து, உளம்
வளைய மாசு உறா, வயது மூன்று உளான்,
உளைய நூலவர் உற்ற காட்சியின்
திளைய வான் அறிவு எய்திச் சீர்த்தனன்.

     சிறுவனும் வானத்து இளம் பிறைபோல் வளர்ந்து, உள்ளம் நெறிவிட்டு
வளைந்து மாசு உறாமல், மூன்று வயதே உள்ளவனாய், கல்வி நூலறிவு
உடையோர் வருந்திக் கற்று அடைந்த அறிவைக் காட்டிலும் மிகுதியாக
வானுலக ஞானம் அடைந்து சிறப்புற்றான்.
 
                4       
அறிவுற் றாகையி னலர்ச்செங் கையெழீச்
செறிவுற் றாசையின் றெய்வ மேற்றிவில்
நெறியுற் றார்நுதல் நிலத்தி றாழ்ந்தனன்
வறிதுற் றாமுடற் குயர்ந்த மாட்சியோன்.