10 |
குயில்கட்
பாடலுங் குழலொப் போதிமம்
வயல்கட் பாடலு மதுவுண் கிள்ளைகள்
பயில்கட் பாடலும் பாலன் கேட்டியைந்
தியல்கட் பாடலு மினிதி யங்குமால் |
|
குயில்கள்
பாடலும், குழல் ஒப்பு ஓதிமம்
வயல்கண் பாடலும், மது உண் கிள்ளைகள்
பயில்கள் பாடலும் பாலன் கேட்டு, இயைந்து
இயல்கள் பாடலும் இனிது இயங்கும் ஆல். |
குயில்கள்
பாடுவதையும், குழலுக்கு ஒப்பாக அன்னங்கள் வயலில்
பாடுவதையும், மதுவை உண்ணும் கிளிகள் பேச்சுக்கள் போல் பாடுவதையும்
அச்சிறுவன் கேட்டு, அவற்றோடு இயைந்து அவற்றின் இயல்புகளைத் தான்
பாடுதலும் இனிது நிகழ்ந்து கொண்டிருக்கும்.
'ஆல்' அசை
நிலை. கிளியின் பேச்சு, கேட்டுப் பழகிப் பேசப்படுதவின்
'பயில்' எனப்பட்டது.
11 |
மலைம
லைக்குரி வனப்பும் வாங்கரு
மலைய லைக்குரி மணியு மார்ந்தசீர்
நிலைநி லைக்குரி மருத நீர்மையுங்
கலைக லைக்குரி கருத்து மெய்தினான். |
|
மலை,
மலைக்கு உரி வனப்பும், வாங்கு அரும்
அலை, அலைக்கு உரி மணியும், ஆர்ந்த சீர்
நிலை, நிலைக்கு உரி மருத நீர்மையும்,
கலை, கலைக்கு உரி கருத்தும் எய்தினான். |
மலையும் மலைக்கு
உரிய அழகும் கடத்தற்கு அரிய கடலும் கடலுக்கு
உரிய மணிகளும், நிறைந்த செல்வமுள்ள நிலமும் நிலம் என்னும்
பெயருக்குரிய வயலின் தன்மையும், கலையும் கலைக்கு உரிய கருத்தும்
அனுபவ வாயிலாக அடையப் பெற்றான்.
|