பக்கம் எண் :

முதற் காண்டம்145

              14         
ஆறு மாறுமொன் றோட லாய்த்தமுண்
மாறு மாறுகொண் டலைம யங்கெனச்
சாறு தாறுமொன் றின்றித் தான்வளத்
தேறு பேறுகொண் டிளவ லோங்கினான்.
 
ஆறும் ஆறும் ஓன்று ஓடலாய், தம் உள்
மாறு மாறு கொண்டு அலை மயங்கு என,
சாறு தாறும் ஒன்று இன்றித் தான் வளத்து
ஏறு பேறு கொண்டு இளவல் ஓங்கினான்.

     ஆறும் ஆறும் ஒன்றாய்க் கலந்து ஓடுகையில், தமக்குள்
ஒன்றுக்கொன்று மாறுபாடு கொண்டு அலைகள் மயங்கும் தன்மை போல,
சிறப்பும் அளவும் என ஒன்றும் இல்லாமல், அச்சிறுவன் புண்ணிய வளத்தில்
மேன்மேலும் ஏறுகின்ற பேறுகொண்டு உயர்ந்து நின்றான்.

     ஆறுகள் மயங்குகையில் எதன் அலை உயர்வென அறியக்
கூடாமைபோல, சூசையிடம் எப்புண்ணியம் சிறப்பாகவும் மிகுதியாகவும்
விளங்கியதென அறியக்கூடாத வகையில் எல்லாமே மேலோங்கி நின்றன
என்பது கருத்து.


              15           
மாக்கட் டாக்கிய மறங்கொள் கூளிகள்
நோக்கத் தாக்கிய நுண்ச டத்திவ
னாக்கத் தாக்கிய வருளைத் தாக்குற
வூக்கத் தாக்கிய விகலு டைத்துளான்.
 
மாக்கள் தாக்கிய மறம் கொள் கூளிகள்,
நோக்கத்து ஆக்கிய நுண் சடத்து, இவன்
ஆக்கத்து ஆக்கிய அருளைத் தாக்கு உற,
ஊக்கத்து, ஆக்கிய இகல், உடைத்து உளான்.

     மக்களைத் தாக்கும் பாவத்தைக் கொண்டுள்ள பேய்கள், இவன் தனது
செல்வமாக ஆக்கிக்கொண்ட தெய்வ அருளைப் பாவத்தால் தாக்கி
அழிக்கவேண்டுமென்ற நோக்கத்தோடு தோற்றுவித்த நுட்பமான வஞ்சனை
கொண்டு ஆக்கிய போரை, இவன் தன் ஊக்கத்தால் என்றும் வென்று
உடைத்து வந்துள்ளான்.