பக்கம் எண் :

முதற் காண்டம்146

     பாவத்தின் தீங்கை மறைத்து, அதனாற் பெறும் சிற்றின்பத்தைப்
பெருக்கிக் காட்டும் வஞ்சகச் சோதனை அறிதற்கு அரிதாய் இருத்தலின்,
'நுண்சடம்' எனப்பட்டது.

                    இளமைப் பருவம்

     -மா, கூவிளம், கூவிளம், கூவிளம்
 
               16             
கள்ளங் காட்டுக ளங்கங்க டிந்தொளி
ருள்ளங் காட்டொளி காட்டிய வொண்முகந்
தெள்ளங் காட்டெழி றீட்டிவ ரங்கடம்
வெள்ளங் காட்டிவ ளர்ந்துவி ளங்கினான்.
 
கள்ளம் காட்டு களங்கம் கடிந்து, ஒளிர்
உள்ளம் காட்டு ஒளி காட்டிய ஒள் முகம்
தெள்ளம் காட்டு எழில் தீட்டி, வரங்கள் தம்
வெள்ளம் காட்டி, வளர்ந்து விளங்கினான்.

     பொய்யான இன்பத்தைக் காட்டித் தூண்டும் பாவக் களங்கமெல்லாம்
விலக்கி, புண்ணியத்தால் ஒளிரும் தன் உள்ளத்தை வெளியே காட்டும்
ஒளிபோல் காட்டி நின்ற ஒளி பொருந்திய முகத்தில் தெளிவைக் காட்டும்
அழகு தீட்டப் பெற்று, அதனால் கொண்ட வரங்களின் வெள்ளத்தை
வெளியே காட்டி, உடலினும் சூசை வளர்ச்சி அடைந்து விளங்கினான்.

     "அகத்தின் அழகு முகத்தில் தெரியும்" என்பதுபோல், அவன் அகத்திற்
கொண்ட புண்ணிய ஒளி முகத்தில் அழகொளியாகப் புலப்பட்டது என்க.
 
               17            
இன்றெ ளித்தெவ ரும்நசை யெய்துவ
பொன்றெ ளித்தெழு தும்படப் பொற்பினான்
மின்றெ ளித்தெழு திக்கதிர் வீசெழீல்
கொன்றெ ளித்தென வாசையிற் கோடிலான்.