இன் தெளித்து,
எவரும் நசை எய்துவ,
பொன் தெளித்து எழுதும் படப் பொற்பினான்;
மின் தெளித்து எழுதிக் கதிர்வீசு எழில்
கொன் தெளித்து என, ஆசையின் கோடு இலான் |
அவன் இன்பத்தை
எங்கும் வாரியிறைத்து, எவரும் ஆசை கொள்ளத்
தக்கவாறு, பொன்னைத் தெளித்து எழுதும் சித்திரப் படம் போன்ற அழகு
கொண்டவன்; மின்னலைத் தெளித்து எழுதியது போல் கதிர் வீசும் தனது
அழகு வீணாகத் தன்மீது தெளிக்கப்பட்டுள்ளது என்று கருதியவன்போல்,
அவ்வழகினால் ஆசைக்கு இடங்கொடுத்து நெறி தவறுதல் இல்லாதவன்,
எய்துவ
- 'எய்த' என்ற வினையெச்சம் இடையே குற்றியலுகரம்
கெடாது வகர உடம்படுமெய் பெற்று வந்துள்ளது.
18
|
கதிர்மு
கத்தலர் கஞ்சங்கொல் கஞ்சமேற்,
பொதிர்மு கத்தெழும் பொற்பளி கொல்நசை
பிதிர்மு கத்திழை யாரிவன் பேரெழில்
முதிர்மு கத்திடை மொய்த்தன நோக்கமே. |
|
கதிர்
முகத்து அலர் கஞ்சம் கொல், கஞ்சம் மேல்
பொதிர் முகத்து எழும் பொற்பு அளி கொல், நசை
பிதிர் முகத்து இழையார் இவன் பேர் எழில்
முதிர் முகத்து இடை மொய்த்தன நோக்கமே? |
ஆசை சிதறிப்
பரவும் முகங்கொண்ட அணிகலன் அணிந்த மகளிர்
இவனது பேரழகு முதிர்ந்த முகத்தினிடையே மொய்க்க விட்ட கண்கள்
கதிரவனின் முகங்கண்டு மலரும் தாமரையோ? தாமரை மலரின்மேல்
திரண்டு எழுந்து சுழலும் அழகிய வண்டுகளோ?
'கொல்' இடைச்
சொல் ஈரிடத்தும் ஐயவினாப் பொருளில் வந்தது.
மகளிர் முகம் தாமரை எனுங்கால் சூசை கதிரவனாகவும், மகளிர் கண்கள்
வண்டு எனுங்கால் சூசை முகம் தாமரையாகவும் கொள்க.
|