என்று, ஒளித்து
எனக் கான் உற ஏகினான்,
குன்று ஒளித்த குரு மணிச் சாயலான்,
கன்று ஒளித்த கறவை கனைந்து என,
அன்று ஒளித்தவற்கு ஆர்த்து அழ யாருமே |
குன்றிலே மறைந்து
கிடந்த செந்நிற மணியாகிய மாணிக்கம் போன்ற
சாயலை உடையவனாகிய சூசை, இவ்வாறெல்லாம் கருதி, ஒளித்துச்
செல்பவன் போல் காட்டில் தங்கச் சென்றான். அன்று ஒளித்துச் சென்ற
அவன் பொருட்டு, யாவரும், கன்று பிரிந்து மறையக் கண்ட பசு
கனைந்ததுபோலப் பெருங்குரலெடுத்து அழ, பிரிந்து சென்றான்.
| 23
|
தேமு
யங்கிய தேன்றரு நீட்டிய
காமு யங்கிய கார்வரை கண்டகாற்
பூமு யங்குபு லந்தரு நீழல்கீழ்
பாமு யங்கவ திந்தனன் பாடுவான் |
| |
தேம்
முயங்கிய தேன் தரு நீட்டிய
கா முயங்கிய கார் வரை கண்ட கால்
பூ முயங்கு புலம் தரு நீழல் கீழ்
பா முயங்க வதிந்தனன் பாடுவான்; |
வாசனை பொருந்திய
தேனை மரங்கள் நீட்டி நின்ற காடுகள் செறிந்த
கரிய மலையைக் கண்ட போது, பூக்கள் செறிந்து கிடந்த ஓர் இடத்திலுள்ள
மர நிழலின் கீழ் தங்கி, மனமும் வாயும் பொருளோடு தழுவி நிற்கப்
பாக்களைப் பாடத் தொடங்குவான்.
நீழல்
- 'நிழல்' என்பதன் நீட்டல் விகாரம்.
சூசையின்
பாடல்
கருவிளம், கருவிளம்,
புளிமா, கூவிளம், கருவிளம், கருவிளம், புளிமா,
கூவிளம்.
| 24
|
வளைத்தன
தனுக்கொடு வெழுவு மீர்க்கடை வடிக்கணை
வினைப்பட
வினையை யாக்கிய
விளைத்தன நசைக்கொடு விளையு நோய்த்திரள் விடப்பகை பகைத்தன
பொறிக ளீர்த்துபு |
|