திளைத்தன
மிறைக்கொடு நசையு நீத்தவை செகுத்தொடு
புதைத்திட வுரிய தாய்ப்பொரு
விளைத்தன திருக்கொடு வளரு மாட்சியை யியற்றிய முகிற்படர் மலையி னூக்கமே. |
| |
"வளைத்தன தனுக்
கொடு எழுவும் ஈர்க்கு அடை வடிக் கணை
வினைப்பட, வினையை ஆக்கிய
விளைத்தன நசைக் கொடு விளையும் நோய்த் திரள் விட, பகை
பகைத்தன பொறிகள் ஈர்த்துபு,
திளைத்தன மிறைக் கொடு நசையும் நீத்து, அவை செகுத்து ஒடு
புதைத்திட உரியது ஆய், பொருவு
இளைத்தன திருக் கொடு, வளரும், மாட்சியை இயற்றிய முகில்
படர் மலையின் ஊக்கமே" |
"வளைத்த வில்லைக்
கொண்டு எய்யப்படும் இறகுகள் அமைந்த
கூர்மையான அம்புகளின் செயலுக்கு ஒத்த வண்ணம், பாவச் செயல்களைச்
செய்யுமாறு உள்ளத்தில் விளைவித்த ஆசையைத் தூண்டுதலாகக் கொண்டு
துன்பத் தொகுதிகள் விளையும். அத்துன்பத் தொகுதிகளினின்று விடுபடுமாறு,
பகையாய்ப் பகைத்த ஐம்பொறிகளை அறுத்தெறிந்தும், பெருகிய
குற்றங்களுக்குக் காரணமான கொடிய ஆசையை ஒழித்தும்,
அவற்றையெல்லாம் கொன்று ஒரு சேரப் புதைப்பதற்கு உரிய இடமாய்
அமைந்துள்ளது இம்மலை. எதுவும் ஒப்பாவதற்கு இளைத்ததாகச்
செல்வங்களைத் தன்னிடத்தே கொண்டு, தன் மாட்சியைத் தனக்கு இயற்றித்
தந்த மேகம் படரும் இம்மலையைச் சார்தலினால் தவத்திற்கு வேண்டிய
ஊக்கம் வளரும்.
'வளைத்தன'
என்பது போன்று அடிதோறும் முதற்கண் வரும்
பெயரெச்சங்கள் இடையே 'அன்' சாரியை பெற்று நின்றன, 'ஆக்கிய'
என்பது 'செய்யிய' என்னும் வாய்பாட்டு வினையெச்சம். 'செகுத்து' என்பதன்
பின் வந்த 'ஒடு', 'உடன்' என்ற பொருளில் நின்றது. 'தவத்திற்கு வேண்டிய'
என்ற சொற்கள் கருத்துத் தொடர்புபற்றி வருவித்து உரைக்கப்பட்டன.
'வளரும்' என்பதனைப் பெயரெச்சமாகக் கொள்ளின், முடிக்குஞ்
சொல்லுமின்றி உரை சிறவாது. ஈர்த்துபு-ஈர்பு; செய்பு என்னும் வாய்பாட்டு
வினையெச்சம். பகுதி - ஈர். அது, 'சொல்' என்ற பகுதி 'சொற்று' என
முனிவர் வாக்கில் அமைதல் போன்று. 'ஈர்த்து என்பது பகுதியாககொண்டு
வினையெச்ச விருதி 'பு' சேர்ந்து நின்றது.
|