| 25
|
சினைக்கரு
முகிற்றலை விலக வூக்குபு திரட்கனி திளைத்தன
பொழில்கள் சூட்டிய
நனைக்கரு விளைத்துய ரிடமி தாய்க்கதிர் நடத்திய திருக்கிள
ருலகின் மேற்செல
நினைக்கரு முரித்திட மெனவி ராப்பகல் நிறுத்திய தவத்துணை
யுதவி யாற்பல
வினைக்கரு மறுத்திறை யவனை வாழ்த்தலின் விருப்பினு
நனித்தகு மலையி னூக்கமே. |
| |
"சினைக் கரு
முகில் தலை விலக ஊக்குபு, திரள் கனி திளைத்தன
பொழில்கள் சூட்டிய
நனைக் கரு விளைத்து, உயர் இடம் இது ஆய், கதிர் நடத்திய திருக்
கிளர் உலகின் மேல் செல
நினைக்கு அரும் உரித் தடம் என, இராப் பகல் நிறுத்திய தவத்துணை
உதவியால், பல
வினைக் கரு மறுத்து இறையவனை வாழ்த்தலின், விருப்பினும் நனித்
தகும் மலையின் ஊக்கமே." |
'சூல் கொண்ட
கரு மேகம் தன் சிகரத்தை விட்டு விலகிச்
செல்லுமளவிற்கு இம்மலை உயர்ந்து நிற்கிறது. அரும்புகளால் கருவை
விளைவித்தும் திரண்ட கனிகளால் நிறைந்தும் விளங்கும் சோலைகளை
அணிந்து, எவற்றினும் உயர்ந்த இடமாய் இம்மலை விளங்குகிறது, கதிரவன்
தன் தேரை நடத்திய அழகு மிக்க வானுலகின் மேலுள்ள வீட்டுலகம்
செல்வதற்கு உரிய நினைத்தற்கு அரிய வழித்தடம் போல் அமைந்துள்ளது.
இரவும் பகலும் நிலைகொண்ட தவத்திற்குத் துணையாய் அமையும்
உதவியால் பல பாவச் செயல்களுக்கும் கருவாக அமைந்த ஆசையை
அகற்றி எப்பொழுதும் இறைவனையே வாழ்த்திக் கொண்டிருக்கும் தன்மை
வாய்ந்த தவத்திற்கு இம்மலை தரும் ஊக்கம் ஒருவர் விரும்பும் அளவுக்கும்
மேலான தகுதி வாய்ந்ததாகும்.
|