பக்கம் எண் :

முதற் காண்டம்153

                  26     
உடித்தன முதற்கதி ரெழுது கோட்டுய ருளத்திரு
                  ளொளித்தொளி யறிவு நீர்த்தலின்
முடித்தன தவத்துயி ரினிது காத்துளி முரட்படு பகைப்பட
                          வரணின் மாட்சியா
யிடித்தன மழைத்துளி பெருகு மாற்றொடு மிணைப்பட
                          நிறைபடு மருளி னீத்தமுள்
குடித்தன மனத்தெழ வுறுதி யாக்கிய குணத்தருள் குடித்தகு
                          மலையி னூக்கமே.
 
"உடித்தன முதல் கதிர் எழுது கோட்டு உயர், உளத்து இருள்
                          ஒளித்து ஒளி அறிவு நீர்த்தலின்,
முடித்தன தவத்து உயிர் இனிது காத்து உளி முரண் படு பகைப்
                          பட அரணின் மாட்சி ஆய்,
இடித்தன மழைத் துளி பெருகும் ஆற்றொடும் இணைப்பட
                          நிறைபடும் அருளின் நீத்தம் உள்
குடித்தன மனத்து எழ உறுதி ஆக்கிய குணத்து, அருள் குடித்
                          தகும் மலையின் ஊக்கமே."

     "உதித்து வந்த பகலவனின் முதற்கதிர் எழுதப் பெறுமாறு சிகரங்களால்
உயர்ந்து, என் உள்ளத்தின் இருளைப் போக்கி ஞான ஒளியாகிய அறிவை
நிரப்பும்; செய்துமுடித்த தவத்தினால் ஆன்மாவை இனிது காத்துக்
கொண்டிருக்கையில் முரண்பட்ட பகையின் கைப்படுங்கால் அரணின்
மாட்சிகொண்டு உதவும்; இடித்துப் பெய்த மழைத்துளியால் பெருகி ஓடும்
ஆற்றுக்கு ஒப்பாக நிறைந்த தெய்வஅருளின் வெள்ளத்தை உள்ளே குடித்த
மனத்தோடு எழுச்சிபெற உறுதிப்படுத்தும்; ஆகையால் இக்குணத்தால்
இம்மலை தவத்திற்குத் தரும் ஊக்கம் தெய்வ அருள் குடியிருக்கச் செய்யத்
தகுதி வாய்ந்ததாகும்.

                  வானவன் வகுத்த தவம்

     -விளம், -மா, தேமா, -விளம், -மா, தேமா
 
                     27     
என்றெழுந் துவப்பி லோங்கி யிரட்டலைக் கடலி னீந்தி
நின்றெழுங் கரைகண் டாற்போ னிழற்றிய திமிசு விம்முங்
குன்றெழுங் குவடு நோக்கிக் குயில்குயின் றகவ மஞ்ஞை
யன்றெழுந் தெழுதும் வண்ணத் தலர்ந்தகா னுழைந்தான்
                                        சூசை.