என்று, எழுந்து,
உவப்பில் ஓங்கி, இரட்டு அலைக் கடலின் நீந்தி
நின்று எழும் கரை கண்டால்போல் நிழற்றிய திமிசு விம்மும்
குன்று எழும் குவடு நோக்கி, குயில் குயின்று, அகவ மஞ்ஞை,
அன்று எழுந்து எழுதும் வண்ணத்து அலர்ந்த கான் நுழைந்தான் சூசை. |
என்றெல்லாம்
மேலே காட்டியவாறு சூசை கூறி எழுந்து, ஒலிக்கும்
அலைகளை உடைய கடலில் நீந்தி நின்று பின் உயர்ந்து நின்ற கரையைக்
கண்டாற்போல் மகிழ்ச்சியால் பொங்கி, நிழல் செய்த வேங்கை மரங்கள்
செறியும் மலையில் உயர்ந்த நின்ற உச்சியை நோக்கி, குயில்கள் கூவ,
மயில்கள் கூப்பிட, அன்று சித்திரமாகத் தீட்டிய தன்மைபோல் உயர்ந்து
மலர்ந்து நின்ற காட்டினுள் நுழைந்தான்.
| 28 |
காரிடைக்
குளித்த மின்போற் கானிடைக் குளிப்பப் போகி
னீரிடைக் குளித்த பேவு நிறநரை குளித்தோர் மூப்பன்
றாரிடைக் குளித்த தேன்போற் றயையிடைக் குளித்த
சொற்கொண்
டேரிடைக் குளித்த பாலா வியம்புதி போவ தென்றான். |
| |
கார் இடைக்
குளித்த மின் போல் கான் இடைக் குளிப்பப் போகில்,
நீர் இடைக் குளித்த பேவு நிற நரை குளித்து ஓர் மூப்பன்
தார் இடைக் குளித்த தேன் போல் தயை இடைக் குளித்த சொல்
கொண்டு,
"ஏர் இடைக் குளித்த பாலா, இயம்புதிபோவது." என்றான். |
கரு மகத்தினிடையே
மறைந்து கொண்ட மின்னல் போல் காட்டினுள்
மறைந்து கொள்ள அவன் போகையில், ஒரு முதியவன் நீரில் படிந்த
நுரையின் நிறமுள்ள நரையில் மூழ்கி, மாலையில் நிறைந்து கிடந்த தேன்
போல் அன்பு பொதிந்த சொல்லைக் கொண்டு, "அழகில் மூழ்கிக் கிடந்த
சிறுவனே, நீ போகும் காரியத்தைச் சொல்லுவாய்." என்றான்.
| 29
|
வீடிழந்
திகல்செய் பேய்கள் வினைப்பகைக் கஞ்சி யோடி
நாடிழந் தொளித்துக் கானி னயந்துறை யறத்தை நாடி
யீடிழந் துயர்ந்த குன்றத் திடத்துநா னொளித்த லுள்ளித்
தோடிழந் தேகு தென்றான் துணையிழந் துயர்ந்த பாலன். |
|