31
|
பைம்பொறி
யரவி னஞ்சிற் பழிப்படப் பகைத்துக் கொல்லு
மைம்பொறி யன்றிச் சூழ்ந்த வனைத்துமே பகைத்த காலை
செம்பொறிப் பெய்த பைம்பூ சிதைந்தென வுளமு மேங்கி
வெம்பொறி யாக வாற்றா வேட்கையே யென்றான் சூசை |
|
"பைம்
பொறி அரவின் நஞ்சில் பழிப்படப் பகைத்துக் கொல்லும்
ஐம் பொறி அன்றி, சூழ்ந்த அனைத்துமே பகைத்த காலை,
செம் பொறி பெய்த பைம் பூ சிதைந்து என, உளமும் ஏங்கி,
வெம் பொறி ஆக ஆற்றா வேட்கையே." என்றான் சூசை. |
சூசை, "கரிய
படத்தைக் கொண்டுள்ள நாகத்தின் நஞ்சைக் காட்டிலும்
பழிக்கத்தக்க வகையில் பகைத்து ஆன்மாவைக் கொல்லும் ஐம்பொறிகளும்
அல்லாது, சூழ்ந்துள்ள அனைத்துமே சேர்ந்து பகைத்து நின்ற போது,
செந்நிறத் தீப்பொறியில் இட்ட பசுமையான மலர் சிதைந்ததுபோல, உள்ளமும்
ஏங்கி, ஆசைகள் வெப்பமுள்ள நெருப்பாகக் கிளர்ந்து தணிக்கப்பட்
மாட்டா." என்றான்.
உடலையே
கொல்லும் அரவு போலாது, ஆன்மாவைக் கொல்லும்
ஐம்பொறிகள் அதைக் காட்டிலும் பழிக்கத்தக்கன ஆயின. பொறிகளும்
சூழ்நிலைகளும் பலவாகவே, அவற்றால் எழும் ஆசைகளும் பலவாதலின்,
'வேட்கை' பன்மையாகக் கொள்ளப்பட்டது.
32
|
பொன்னொளி
காட்டுஞ் செந்தீ புகையகில் மணத்தைக்
காட்டும்
மின்னொளி மணியைக் காட்டும் வினைசெயும் படைக்கல்
மாட்சி
தன்னொளி காட்டுந் துன்பத் தகுதியிற் குன்றா வூக்கம்
மன்னொளி காட்டு நல்லோய் மறையிது வென்றான்
சான்றோன். |
|
"பொன்
ஒளி காட்டும் செந்தீ. புகை அகில் மணத்தைக் காட்டும்.
மின் ஒளி மணியைக் காட்டும் வினை செயும் படைக்கல். மாட்சி
தன் ஒளி காட்டும் துன்பத் தகுதியில் குன்றா ஊக்கம்
மன் ஒளி காட்டும் நல்லோய், மறை இது." என்றான் சான்றோன். |
|