பக்கம் எண் :

முதற் காண்டம்157

     அறிவுடையோனாகிய அம்முதியவன், "நிலை பெற்ற ஒளியைக்
காட்டும் நல்ல சிறுவனே, செந்நிற நெருப்பே பொன்னின் ஒளியைக்
காட்டும். நெருப்பில் வெந்து புகைந்த அகிலே தன் மணத்தைக் காட்டும்.
உராய்தலாகிய வினையைச் செய்யும் சாணைக்கல்லே மின்னல் போல்
ஒளியுள்ள மணியின் தன்மையைக் காட்டும். துன்ப காலத்தில் குறையாத
ஊக்கமே அறமாட்சியின் ஒளியைக் காட்டும். இதுவே வேத நூல் விதி."
என்றான்.

     "சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
     சுடச்சுட நோற்கிற்பவர்க்கு" (கு. 267)

என்ற குறள் கருத்தும் காண்க.

 
                          33 
உள்ளுயி ருண்ணுங் கூற்றி னுடன்று கொல் நசையைக் கொல்லத்
தெள்ளுயிர் மருட்டுஞ் செல்வத் திரள்துறந் தொருங்கு நீங்கிக்
கள்ளுயிருயிர்த்த பைம்பூங் கானில்வாழ் தவத்தை நாட
லெள்ளுயிர் தெளிக்கும் வண்ண மென்பரே யென்றான் சேடன்.
 
 "உள் உயிர் உண்ணும் கூற்றின் உடன்று கொல் நசையைக் கொல்ல,
தெள் உயிர் மருட்டும் செல்வத் திரள் துறந்து, ஒருங்கு நீங்கி,
கள் உயிர் உயிர்த்த பைம் பூங் கானில் வாழ் தவத்தை நாடல்,
எள் உயிர் தெளிக்கும் வண்ணம் என்பரே?" என்றான் சேடன்.

     சிறுவன், "உடலினுள் இருக்கும் உயிரை உண்ணும் கூற்றுவனைக்
காட்டிலும் சினந்து கொல்லும் ஆசையைக் கொல்ல வேண்டுமாயின்,
தெளிவுற்ற உயிரையே மயக்கும் இயல்புள்ள செல்வத் திரளையெல்லாம்
துறந்து, அவற்றை ஒருங்கு விட்டு நீங்கி, தேன் மணத்தைக் காற்றின்
வழியாகப் பரப்பிய பசுமையான பூக்கள் நிறைந்த காட்டில் வாழ்வதாகிய
தவத்தை நாடுதல் ஒன்றே, இகழ்ச்சி கொண்ட உயிரைத் தெளிவிக்கும்
முறை என்று அறிவுடையோர் சொல்லுவரே?!' என்றான்.

     மனித உயிர் படைப்பில் சிறந்ததே ஆயினும் பாவத்தால் பழுது
பட்டமையால் இகழ்ச்சி கொண்ட உயிர் ஆயிற்று.
 
                     34      
ஒருங்கெலா நீக்க லோர்நா ளுறுதியே பகைத்துச் சூழ்தன்
மருங்கெலா மிருப்ப வுள்ள வாயடைத் திடைவிடாது
நெருங்கெலா நுழையா காத்த னெடும்பயன் பயத்த
                                    நீண்போர்
சிருங்கெலா நிலையி னூங்குந் திறமிதென் றய்யன்
                                    சொன்னான்.