"ஒருங்கு எலாம்
நீக்கல் ஓர் நாள் உறுதியே. பகைத்துச் சூழ் தன்
மருங்கு எலாம் இருப்ப, உள்ள வாய் அடைத்து, இடை விடாது
நெருங்கு எலாம் நுழையா காத்தல் நெடும் பயன் பயத்த நீண்போர்.
சிருங்கு எலா நிலையின் ஊங்கும் திறம் இது." என்று அய்யன்
சொன்னான். |
அப்பெருமகன்,
"நாம் எல்லாவற்றையும் ஒரு நாள் ஒருங்கு நீக்குதல்
உறுதியே. அதற்குமுன், தன்னைப் பகைத்துச் சூழ்ந்த எல்லாம் தன் பக்கத்தே
இருக்கவும், உள்ளம் என்னும் வாயிலை அடைத்துக்கொண்டு, நுழையவென்று
இடைவிடாது நெருங்கும் எல்லாவற்றையும் உள்ளே நுழையவிடாது காத்தல்
என்பது நெடும் பயன் பயக்கத் தக்க நீண்ட போர் ஆகும். இதுவே மலைச்
சிகரங்கள் எல்லாவற்றின் நிலையினும் மேம்பட்ட திறம் ஆகும்." என்று
சொன்னான்.
35 |
நாடொறுங்
கனிந்த செந்தே னற்கனி யளித்த னன்றோ
கோடுறு மரமுந் தன்னைக் கொடுத்தலே நன்றோ விவ்வா
றீடுறு முளது முள்ளு மீதல்செய் துறவே யென்பார்
வீடுறு நூலோ ரென்ன விளம்பினா னிளவல் மாதோ. |
|
"நாள்
தொறும் கனிந்த செந்தேன் நல் கனி அளித்தல் நன்றோ?
கோடு உறு மரமும் தன்னைக் கொடுத்தலே நன்றோ? இவ்வாறு,
ஈடு உறும் உளதும் உள்ளும் ஈதல் செய் துறவே என்பார்
வீடு உறு நூலோர்." என்ன விளம்பினான் இளவல் மாதோ. |
"நாள் தோறும்
அன்றன்று கனிந்த செந்தேன் சுவையுள்ள நல்ல
கனிகளை மட்டும் கொடுத்தல் நல்லதோ? கிளைகள் உள்ள மரமேயாயினும்,
அது தன்னையே முழுதும் கொடுத்தல் நல்லதோ? இவ்வாறே, தன்னிடம்
உள்ளதும் தன் உள்ளமும் ஒன்றாகச் சேர்த்து ஈதலைச் செய்யும் துறவே
பெருமை பெறுமென்று வீட்டுலகம் பற்றிய நூலில் வல்லோர் சொல்லுவர்."
என்று சிறுவன் சொன்னான்.
|