பக்கம் எண் :

முதற் காண்டம்161

                    39
ஈரறம் வழங்கும் வண்ணத் தியாவையுந் துறந்த தன்மை
பேரற மென்பக் கேட்டேன் பின்னையத் துறவி னூங்கு
மோரற முளதே லையா வுரைக்குதி யுரைத்த வன்ன
சீரறம் விழைவே னென்றான் சேணுல குரிய பாலன்.
 
"ஈர் அறம் வழங்கும் யாவையும் துறந்த தன்மை
பேர் அறம் என்பக் கேட்டேன் பின்னை, அத் துறவின் ஊங்கும்
ஓர் அறம் உளதேல், ஐயா, உரைக்குதி. உரைத்த அன்ன
சீர் அறம் விழைவேன்." என்றான் சேண் உலகு உரிய பாலன்.

     வானுலகிற்கு உரிய அச்சிறுவன், "ஐயா, இல்லறம் துறவறமென்று
இரண்டு வகை அறங்கள் வழங்கி வரும் முறையில், எல்லாவற்றையும்
துறந்த தன்மை கொண்ட துறவறமே பெருமை வாய்ந்த அறமென்று
கேள்விப்பட்டேன். அப்பால், அந்தத் துறவறத்திற்கும் மேலாக ஓர்
அறம் இருக்குமாயின், அது பற்றிச் சொல்வாய். சொன்ன அந்தச்
சிறந்த அறத்தையே நான் விரும்புவேன்." என்றான்.

     என்ப - 'என்ன' என்ற வினையெச்சம் இடையே பகரச் சாரியை
கொண்டது. வண்ணத்து+யாவையும்-வண்ணத் தியாவையும் : யகரம்
வரக் குற்றியலுகரம் இகரமாகத் திரிந்தது.
 
                    40
ஈரறம் பிரிந்து நோக்கி லியம்பிய துறவின் மாட்சி
பேரற மாவ தன்றிப் பிரிவிலா விரண்டுந் தம்முள்
ளோரற மாகச் சேர்க்கி லுறுதியும் பயனு மோங்கத்
தேரற மாகு மென்றான் செழுந்துறைக் கேள்வி் மூத்தோன்.
 
"ஈர் அறம் பிரிந்து நோக்கில், இயம்பிய துறவின் மாட்சி
பேர் அறம் ஆவது அன்றி, பிரிவு இலா இரண்டும் தம்முள்
ஓர் அறமாகச் சேர்க்கில், உறுதியும் பயனும் ஓங்கத்
தேர் அறம் ஆகும்." என்றான் செழுந் துறைக் கேள்வி மூத்தோன்.