செழுமையான
பல துறைக் கல்வி சான்ற முதியவன் "இரண்டு
அறங்களென்று பிரிந்த தன்மையாய்த் தனித்தனியே நோக்கினால், நீ கூறிய
வகைத் துறவின் மாண்பால் துறவறமே பேரறம் ஆகும். அப்படியல்லாமல்,
பிரிவு இல்லாது இரண்டையும் தம்முள் ஒரே அறமாகச் சேர்க்கக் கூடுமாயின்,
அறத்திற்கு உறுதி நிலையும் தமக்கும் பிறர்க்கும் பயனும் பெருகுமாறு
தெரிந்துகொண்ட அறமாய் அது அமையும்." என்றான்.
ஈரறமும் ஓரறமாகச்
சேர்க்கின், அது இல்லுறை துறவறம் என்றோ,
துறவு கொள் இல்லறம் என்றோ பெயர் பெறும். வந்தவன் வானவனாதலின்,
'செழுந்துறைக் கேள்வி' அவனுக்குப் பொருந்தாதெனினும், தோற்றத்தை
வைத்துச் சூசை அவ்வாறு மதித்ததாகக் கொள்ள வேண்டும்.
41
|
பாற்கலந்
திட்ட தெண்ணீர் பால்குன்றும் பண்பு மில்லால்
மேற்கலந் தொளிர்ந்த வெய்யோன் வெயினுமுன் னெரித்த தீபம்
போற்கலந் திசைத்த மற்றப் புண்ணியந் துறவு வாய்ந்த
சாற்கலந் தியல்பை யேற்றுந் தகுதியோ வென்றான் பாலன். |
|
"பால்
கலந்திட்ட தெள் நீர் பால் குன்றும்; பண்பும் இல் ஆல்.
மேல் கலந்து ஒளிர்ந்த வெய்யோன் வெயிலுமுன் எரிந்த தீபம்
போல், கலந்து இசைத்த மற்றப் புண்ணியம், துறவு வாய்ந்த
சால் கலந்து, இயல்பை ஏற்றும் ததியோ?" என்றான் பாலன். |
"பாரோடு கலந்து
கொண்ட தெளிந்த நீரினால் பாலின் தன்மை
குன்றும்; நீரின் பண்பும் இல்லாது போகும். வானமெல்லாம் கலந்து ஒளிர்ந்த
கதிரவனுக்கு முன் எரியவிட்ட விளக்குப் போல, கலந்து கூட்டிய இல்லறப்
புண்ணியங்கள், துறவறத்தால் வாய்ந்த பெருமையோடு கலந்து, றறறத்தின்
உயல்பை உயர்த்தும் தகுதி உடையனவோ?" என்று வினவினான் சிறுவன்.
கதிரவன் முன் எரிந்த விளக்கு தன் ஒளி குன்றுவதேயன்றிக்
கதிரவனின் ஒளியை மிகுவிக்காமை போல, ஈரறமும் ஓரறமாக்கிய விடத்து,
இல்லறச் சிறப்பு மங்குவ மின்றி, எவ்வகையினும் துறவறச் சிறப்பை
மிகுவிக்காது என்பது கருத்து, வெயிலு - வெயில்; 'புல்லு' என்பது போல்
உகரச்சாரியை பெற்றது. 'துறவு' பின் வரவே, 'மற்றப் புண்ணியம்' இல்லறப்
புண்ணியம் ஆயிற்று.
|