42 |
தெருட்டகு
முணர்விற் சான்றோன் சேடனைத் தழுவிச் சொல்வா
னருட்டகு முணர்வன் பூக்க மரும்பொறை யீகை மற்ற
மருட்டகு மியல்தீர் மாட்சி மதியைமீன் சூழ்ந்த தேபோற்
பொருட்டகு நாட்டில் வைகும் பொலந்துற வணியு மன்றோ |
|
தெருள் தரும்
உணர்வின் சான்றோன் சேடனைத் தழுவிச் சொல்வான் :
"அருள் தரும் உணர்வு அன்பு ஊக்கம் அரும் பொறை ஈகை மற்ற
மருள் தரும் இயல்தீர் மாட்சி, மதியை மீன சூழ்ந்ததே போல்,
பொருள் தரும் நாட்டில் வைகம் பொலம் துறவு, அணியும் அன்றோ? |
தெளிவு பொருந்திய
அறிவு படைத்த பெரியோன் சிறுவனைத் தழுவிக்
கொண்டு பின்வருமாறு சொல்வான்: "செல்வத் தகுதியுள்ள நாட்டில் தங்கிச்
செய்யும் அழகிய துறவறம், மதியை விண் மீன்கள் சூழ்ந்ததுபோல்,
அருளையும் தக்க அறிவையும் அன்பையும் ஊக்கத்தையும் அரிய
பொறுமையையும் கொடையையும் மற்றும் மயக்கத்தோடு பொருந்திய தீய
இயல்புகளைப் போக்கும் மாட்சியையும் தனக்கு அணியாகக் கொண்டு
விளங்குமன்றோ?
43 |
கான்வளர்
தவத்தைக் கானிற் கண்டெளி தடைவார் மற்றோர்
தான்வளர் தவத்தைக் கூட்டித் தமர்க்கெலா நகரிற் காட்டல்
வான்வளர் வலமை பூத்த மாண்பிதே யதுநின் பாலாம்
மீன்வள ருணர்வோ யென்று மின்னென மறைந்தாள் சான்றோன். |
|