பக்கம் எண் :

முதற் காண்டம்164

"கான் வளர் தவத்தைக் கானில் கண்டு எளிது அடைவார் மற்றோர்.
தான் வளர் தவத்தைக் கூட்டித் தமர்க்கு எலாம் நகரில் காட்டல்
வான் வளர் வலமை பூத்த மாண்பிதே. இது நின் பால்ஆம்,
மீன் வளர் உணர்வோர்!" என்று மின் என மறைந்தான் சான்றோன்.

     "விண்மீன் போல் வளரும் உணர்வு உடையவனே, காட்டில்
வளரக்கூடிய தவத்தை மற்றோர் எளிதாகக் காட்டில் கண்டு அடைவர்.
ஒருவன் தான் வளர்க்கும் தவத்தைத் தன் உறவினர்க் கெல்லாம் நகரத்தில்
கூட்டிக் காட்டுதல் வானுலகில் வளரும் வல்லமையோடு தோன்றிய
மாண்பினை உடையது. அது உன்னிடத்து அமைவதாகும்." என்று கூறி
அப்பெரியோன் மின்னல் போல் மறைந்தான்.
 
                     44
ஊனுருக் காட்டி வந்த உம்பனென் றறிந்து போற்றித்
தேனுருக் கோதை யொத்தான் றிளைத்தவின் புருகி மூழ்கிக்
கூனுருப் பிறையு மெஞ்சக் கொழுங்கதிர் முகத்தில் வீசப்
பானுருச் சுமந்து நாறும் பவளநன் மதலை யொத்தான்.
 
ஊன் உருக் காட்டி வந்த உம்பன் என்று அறிந்து, போற்றி,
தேன் உருக் கோதை ஒத்தான், திளைத்த இன்பு, உருகி, மூழ்கி,
கூன் உருப் பிறையும் எஞ்சக் கொழுங் கதிர் முகத்தில் வீச,
பானு உருச் சுமந்து நாறும் பவள நல் மதலை ஒத்தான்.

     தேனைக் கொண்ட பூமாலை போன்றவனாகிய சூசை, மறைந்தவன்
ஊனுடல் கொண்ட உருவத்தைக் காட்டி வந்த வானவனென்று அறிந்து,
அவனை வாழ்த்தி, உள்ளம் உருகி, நிறைந்த இன்பத்தில் மூழ்கி, கூனல்
உருவத்துப் பிறையும் குறைபடக் கொழுமையான கதிரொளி முகத்தில் வீச,
கதிரவனின் ஒளி வடிவத்தைச் சுமந்து தோன்றும் நல்ல பவளத்தூண்
போன்று நிலை கொண்டான்.

                      45
நீதியு நெறியுஞ் சொன்ன நிலையெலா முணர்ந்த பின்ன
ராதியு மந்தத் தானு மாயநின் கழலல் லாது
வீதியு மெனக்கொன் றுண்டோ வினையறு மிறையோ யென்ன
வோதியும் விறலும் விம்ம வொளித்ததன் னகரஞ் சேர்ந்தான்.