பக்கம் எண் :

முதற் காண்டம்167

     வான்வீட்டை ஏற்கெனவே அடைந்து கொண்ட புனிதர்களின்
மாண்புள்ள அருளைத் தானும் பெறும் பொருட்டு, அவர்கள் இவ்வுலகில்
கொண்டு ஒழுகிய ஞானத்தைத் தானும் கொண்டு ஒழுகினான்; தான்
பொருள் இல்லாதவனாய் இருந்தும், பொருள் இல்லாதவர்கள் மகிழ்ச்சி
கொள்ளும் பொருட்டு, தன்னால் இயன்ற ஈகையைக் கடைப்பிடித்தான்;
மாசற்ற தூயவனாய் இருந்தும் தவத்தை மேற்கொண்டான்; எவ்வகையிலேனும்
குறைபாடு கொண்டவர் மன வலிமை கொள்ளும் பொருட்டு,
இவற்றையெல்லாம் தான் கைக்கொண்டான்.

     கொளவான் - 'கொள்ளும் பொருட்டு' எனப்பொருள்படும் 'வான்'
ஈற்று வினையெச்சம்.
 
                      49
புன்மைப் பட்டார் கொண்டவை வெஃகிப் பொருள்கொண்ட
தன்மைப் பட்டார் யாவையு முண்ணார் தரல் செய்யா
ரின்மைப் பட்டான் சூசையு ழைத்தே யினிதுண்பா
னன்மைப் பட்டார்ந் தேற்குன ருய்வா னனியீவான்.
 
புன்மைப் பட்டார் கொண்டவை வெஃகி, பொருள் கொண்ட
தன்மைப் பட்டார், யாவையும் உண்ணார்; தரல் செய்யார்
இன்மைப் பட்டான் சூசை உழைத்தே இனிது உண்பான்;
நன்மைப் பட்டு ஆர்ந்து ஏற்குநர் உய்வான், நனி ஈவான்.  

     ஈனக்குணம் படைத்தோர் தாம் கொண்டவற்றை விரும்பி, பொருளைத்
தேடிக் கொண்ட தன்மை மட்டும் உடையவராய், எவற்றையும் தாமும்
உண்ணார்; பிறருக்கும் ஈயார். வறுமைப் பட்டவனாகிய சூசை தான்
உழைத்துப் பெற்ற பொருளைக் கொண்டு தானும் இனிது உண்பான்; கூடி
வந்து இரப்போர் நன்மை அடைந்து உய்யும் பொருட்டுத் தாராளமாய்
ஈவான்.

     உண்ணாதும் ஈயாதும் பொருள் சேர்த்தலை, "நாய் பெற்ற தெங்கம்
பழம்," என்று 'பழமொழி' (216) இழித்துக் கூறும்.
 
                   50
வேய்ந்தார்ந் தொன்றும் வான் பொருள் விஞ்ச
     
                     விழைவோடொன்
றீய்ந்தா லொன்றே கோடிப யக்கு மெனிலன்பால்
வாய்ந்தா னொன்றுந் தன்வறு மைக்கே மலிவீக
லாய்ந்தா லொன்றும் வான்புகழ் கூற லரிதன்றோ.