பக்கம் எண் :

முதற் காண்டம்169

                  52
காக்கா துள்ளம் மைம்பொறி காட்டும் வழிநிற்பப்
போக்கா துள்ளம் முய்யமெஞ் ஞானம் புரியாண்மை
யாக்கா துள்ள யாவும கன்றே யழிவாக்கம்
நோக்கா துள்ள தேவரு ணோக்கி நுதற்கிற்பான்.
 
காக்காது உள்ளம் ஐம் பொறி காட்டும் வழி நிற்பப்
போக்காது, உள்ளம் உய்ய மெய் ஞானம் புரி ஆண்மை
ஆக்காது உள்ள யாவும் அகன்றே, அழிவு ஆக்கம்
நோக்காது, உள்ள தே அருள் நோக்கி நுதல்கிற்பான்.  

     உள்ளத்தைக் காவாமையால் ஐம்பொறிகள் காட்டும் தீய வழியில்
நிலைகொள்ளப் போக்காமலும், உள்ளம் உய்யுமாறு மெய்யறிவு நடத்தும்
ஆண்மையை ஆக்காமல் தடையாக உள்ள யாவற்றையும் விட்டு அகன்றும்,
அழிவுள்ள செல்வத்தை நோக்காமலும், என்றும் நிலையாக உள்ள தெய்வ
அருளை நோக்கியே கருத்தைச் செலுத்துவான்.
 
                  53
சொல்லுஞ் செல்லாக் கானுழை யாதண் டுளிதூற்றுஞ்
செல்லுஞ் செல்லா தீயெரி கற்றை திளைவேந்த
னெல்லுஞ் செல்லாக் கானகு நற்கா னெனவுள்ளம்
புல்லும் பொல்லாங் கீர்த்துபு புக்கைம் பொறிகாத்தான்.
 
சொல்லும் செல்லாக் கான் நுழையா, தன் துளி தூற்றும்
செல்லும் செல்லா, தீ எரி கற்றை திளை வேந்தன்
எல்லும் செல்லாக் கான் நரு நல் கான் என, உள்ளம்,
புல்லும் பொல்லாங்கு ஈர்த்துபு புக்கு ஐம்பொறி காத்தான்,  

     மனிதர்பேசும் சொல்லும் உள்ளே செல்ல இயலாத காட்டினுள்ளே
தவங் கருதி நுழைந்து புகாமல், குளிர்ந்த துளியைத் தூற்றும் மேகமும்
செல்லாததும், தீப் போல் எரியும் கதிர்க் கற்றைகள் நிறைந்த அரசனாகிய
கதிரவனின் ஒளியும் செல்லாததுமான பாலைவனத்தையும் இகழும் நல்ல
பாலைவனம் இதுவே எனத் தன் உள்ளத்துள் புகுந்து, அங்கே பொருந்திக்
கிடக்கும் தீமையையெல்லாம் அறுத்துக் களைந்து, ஐம்பொறிகளையும்
அடக்கிக் காத்தான்.