பக்கம் எண் :

முதற் காண்டம்170

     சூசை பற்றுக்களையெல்லாம் அறுத் தெறிந்து, தன்உள்ளத்தையே
பாலைவனமாக்கித் தவம் மேற்கொண்டான் என்பது கருத்து. வெயில்
எரிப்பதும் மழை பொழியாமையும் பாலைவனத்து இயற்கை.

     ஈர்த்துபு-ஈர்பு: 'செய்யு' என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம்.
 
                   54
சுட்டா குலமுற் றோர்வன முற்றான் றுகடீரா
முட்டா சையையுற் றெங்கணு முற்றால் முனிதானோ
பட்டா சையிரண் டீர்த்துள மோங்கப் பல யாவும்
விட்டா யுளதோ ராண்டகை மேவி வினைதீர்த்தான்
 
சுட்டு ஆகுலம் உற்று ஓர் வனம் உற்றான், துகள் தீரா,
முட்டு ஆசையை உற்று, எங்கணும் உற்றால் முனி தானோ,
பட்ட ஆசை இரண்டு ஈர்ந்து, உளம் ஓங்க, பல யாவும்
விட்டு ஆய், உளது ஓர் ஆண்டகை மேவி வினைதீர்ந்தான்  

     தவங் கருதி ஒரு பாலைவனத்தை அடைந்தவனும் அதனால்
சுடப்பட்டுத் துன்பம் உற்றும், குற்றங்கள் நீங்கப் பெறாமல், மோதுகின்ற
ஆசைகளுக்கு இடந்தந்து, எங்கும் சுற்றி அலைந்தால் முனிவன்
ஆய்விடுவானோ? சூசையோ, உள்ளத்தில் இயல்பாகத் தோன்றும் இரு
வகை ஆசைகளையும் அறுத்தெறிந்து, உள்ளம் மேலோங்க, பலவாகிய
பிற ஆசைகள் யாவற்றையும் விட்டு என்றும் உள்ளதொரு பொருளாகிய
ஆண்டவனையே சார்ந்து நின்று தீயினை எல்லாம் தீர்த்தான்.

     ஆசை இரண்டு: 'தான்' என்னும் அகப்பற்றும், 'தனது' என்னும் புறப்
பற்றுமாம். "யான் எனதுஎன்னும் செறுக்கறுப்பான் வானோர்க்கு, உயர்ந்த
உலகம் புகும்," என்ற குறளும் (446), "பற்றுக பற்றற்றான் பற்றினை
அப்பற்றைப், பற்றுக பற்று விடற்கு," என்ற குறளும் (350) ஓப்பிடத்தக்கன.
பட்ட + ஆசை - 'பட்ட வாசை' என்பது 'பட்டாசை' எனத் தொகுத்தல்
விகாரம் பெற்றது.