55 |
மைப்பட்
டிளருஞ் சேற்றிலு லாவிண் மணிமாலி
செய்ப்பட் டொளிருஞ் செங்கதிர் மாசாய்ச் சிதைவாமோ
பொய்ப்பட் டயரும் புற்பொருண் மேலைம் பொறிவிட்டால்
மெய்ப்பட் டுயரின் னானுள மாழ்கா வினைகொள்ளான். |
|
மைப்
பட்டு இளரும் சேற்றில் உலா விண் மணி மாலி
செய்ப் பட்டு ஒளிரும் செங் கதிர் மாசு ஆய்ச் சிதைவு ஆமோ?
பொய்ப் பட்டு அயரும் புன் பொருள் மேல் ஐம் பொறி விட்டால்,
மெய்ப் பட்டு உயர் இன்னான் உளம் மாழ்கா வினை கொள்ளான். |
மை நிறங் கொண்டு
இளகிக் கிடக்கும் சேற்றின் மேல் உலாவும்
விண் மணியாகிய கதிரவனின் செந்நிறங் கொண்டு ஒளிரும் செவ்விய கதிர்
மாசடைந்து சிதையுமோ? மெய்யின் வயப்பட்டு உயரும் இயல்பு கொண்ட
இவண், பொய்யின் வயப்பட்டுக் கெடும் இயல்புள்ள அற்பப் பொருளின்
மேல் தன் ஐம்பொறிகளைப் பொது நோக்காகச் செல்ல விட்டாலும்,
அவற்றால் உள்ளம் மயங்கித் தீ வினை கொள்ளான்.
நாட்டில்
இருப்பவனாதலின், உலகப் பொருட்கள் அறவே விலக்க
இயலாமல், ஆசையை மட்டும் விலக்கி, தாமரை இலை மேல் தண்ணீர்
போல், ஒட்டியும் ஒட்டாமல் வாழ்ந்தானென்று கொள்க.
56 |
போரா
றென்னும் பூவிடை மாக்கட் புரையெல்லாஞ்
சேரா றென்னும் மின்பமெ லாந்நீர் தெளிவெய்தி
யீரா றென்னும் மாண்டுள னென்றும் மினிதின்னா
வூரா றென்னும் மன்றல்செ யேனென் றுரனுற்றான். |
|
போர்
ஆறு என்னும் பூஇடை மாக்கள் புரை எல்லாம்
சேர் ஆறு என்னும் இன்பம் எலாம் தீர் தெளிவு எய்தி
ஈர் ஆறு என்னும் ஆண்டு உளன், "என்றும் இனிது இன்னா
ஊர் ஆறு என்னும் மன்றல் செயேன்" என்று உரன் உற்றான். |
போர்க்களம்
எனப்படும் இத்தரையில் மக்களுக்குக் குற்றங்களெல்லாம்
வந்து சேரும் வழி எனப்படும் இன்பங்களையெல்லாம் விலக்கக்கூடிய |