59 |
தேக்கிப்
பாரிறி ளைத்துள யாவையுந்
தூக்கிப் பார்த்தனன் றோன்றிய தீதெலாம்
போக்கிப் பாய்பயன் பூத்துக்க லந்தநீர்
நீக்கிப் பாலுணு மோதிம நேருவானா. |
|
தேக்கிப்
பாரில் திளைத்து உள யாவையும்
தூக்கிப் பார்த்தனன், தோன்றிய தீது எலாம்
போக்கி, பாய் பயன் பூத்து, கலந்த நீர்
நீக்கிப் பால் உணும் ஓதிமம் நேருவான். |
குவித்த தன்மையாய்
இவ்வுலகில் நிறைந்துள்ள யாவற்றையும்
ஆராய்ந்து பார்ந்தவனாய், தீதாகத் தோன்றிய எல்லாவற்றையும் விலக்கி
பரவிய பயனுள்ளவற்றில் சிறந்து நின்று, கலந்த நீரை நீக்கிப் பாலை
மட்டும் உண்ணும் அன்னப்பறவைக்கு ஒப்பாய் விளங்குவான்.
60 |
மீயி
ருட்கொணர் மேகமி டைந்தெனாப்
போயி ருட்கொண ரைம்பொறி போக்கிலான்
றூய ருட்கொணர் சூட்சி தெளிந்துளம்
பாய ரட்கொணர் பற்றுத லெய்தினான். |
|
மீ
இருள் கொணர் மேகம் மிடைந்து எனா,
போய் இருள் கொணர் ஐம்பொறி போக்கு இலான்,
தூய் அருள் கொணர் சூட்சி தெளிந்து, உளம்
பாய் அருள் கொணர் பற்றுதல் எய்தினான். |
வானத்தில்
இருளைக் கொணரும் மேகங்கள் செறிந்தது போல், தம்
போக்கிலே போய் உள்ளத்தில் இருளைக் கொணரும் ஐம்பொறிகளின்
வழியே போகாதவனாய், தூய அருளைக் கொணரும் முறையால் தெளிந்து,
பரந்த தெய்வ அருளைக் கொணரும் பற்றுதலைக் கைக்கொண்டான்.
61
|
கோதி
லோர்முறை கொண்டு நடந்தபின்
னேதி லோர்முறை யாருந டந்தெழ
நீதி யோர்முறை நேர்நெறி யோதுவான்
வேதி யோர்முறை விஞ்சிய மாட்சியான். |
|