கோது இல் ஓர்
முறை கொண்டு நடந்த பின்,
ஏது இல் ஓர் முறை யாரும் நடந்து எழ,
நீதி ஓர் முறை நேர் நெறி ஓதுவான்
வேதியோர் முறை விஞ்சிய மாட்சியான் |
வேத நூல் வல்ல
குருக்களின் ஒழுக்க முறையையும் விஞ்சிய
மாட்சியுள்ள சூசை, குற்றமில்லாத ஒப்பற்ற நெறியைத் தானே முதலில்
கைக்கொண்டு நடந்த பின், குறையில்லாத ஒப்பற்ற அந்நெறியில்
எல்லோரும் நடந்து உயர்வு பெறுமாறு, நீதியை அவர்கள் உணரத்தக்க
முறையில் நேர்மையான வழியை எடுத்துக் கூறுவான்.
ஒழுக்கம் முன்னும்
அறவுரை பின்னுமாக அமைவதே ஒழுக்க நெறி
வளர்வதற்கு வழியென மீண்டும் வலியுறுத்தியவாறு.
62
|
முனிப
ழித்த விளையமூத் தோனெனப்
பனிப ழித்தப யன்பட யாவருங்
கனிப ழித்தக னிந்தநல் வீணைதன்
றொனிப ழித்தசொற் சொல்லிய வாய்மையான். |
|
முனி பழித்த இளைய மூத்தோன் என,
பனி பழித்த பயன் பட யாவரும்,
கனி பழித்த கனிந்த நல் வீணை தன்
தொனி பழித்த சொல் சொல்லிய வாய்மையான் |
இளையவனாய்
இருந்தும் அறிவாலும் ஒழுக்கத்தாலும் முனிவர்களையும்
வென்ற முதியவன் போல, குளிர்ச்சியையெல்லாம் வென்ற பயனை
எல்லோரும் அடையுமாறு, கனியின் இனிமையைப் பழித்தனவும் கனிந்த நல்ல
வீணையின் தொனியைப் பழித்தனவுமான சொல்லைச் சொல்லிய வாய்த்திறம்
கொண்டவன் சூசை.
'முனி' ஒருமையாய்
நின்று இனஞ் சுட்டிய பன்மைப் பொருளது.
63 |
பொருள்க
டிந்துபு லன்கள டக்கலால்
மருள்க டிந்தம னந்தெளி காட்சியா
னருள்க டிந்தவ சடரை நோக்கலோ
டிருள்க டிந்தவி ரக்கமுற் றேங்குவான். |
|