மணஞ்
செய்யாத் தவ விரதம் பூண்ட சூசையும் கன்னிமை விரதம்
பூண்ட மரியாளும் இறைவன் வகுத்த திட்டப்படி திருமணம் புரிந்து கொண்ட
நிகழ்ச்சியைக் கூறும் பகுதி.
ஆதிப்பாவத்தால்
அழிவுறும் உலகம்
-மா,
கூவிளம், -விளம், -விளம், -மா
1
|
இவ்வ
ருங்குணத் திரங்கிய வினியவன் புடைமை
வவ்வ ருங்குணத் தவனிகொள் மடிவினை நீக்கிச்
செவ்வ ருங்குணத் திறையவன் சென்றதைத் தீர்ப்ப
வவ்வ ருங்குணத் தவன்விருப் பெய்திநொந் தயர்வான் |
|
இவ்
அருங் குணத்து, இரங்கிய இனிய அன்புடைமை
வவ்வு அருங் குணத்து, அவனிகொள் மடிவினை நீக்கி,
செவ் அருங் குணத்து இறையவன் சென்று அதைத் தீர்ப்ப,
அவ் அருங் குணத் தவன், விருப்பு எய்தி, நொந்து அயர்வான். |
மேலே
காட்டிய இவ்வகை அருங்குணத்தோடு, மன்னுயிர்களுக்காக
இரங்கிய இனிய அன்புடைமையால் கவரப்பட்டு நின்ற அருங் குணத்தால்,
இவ்வுலகங் கொண்டுள்ள கெடுதியைத் தன்னால் இயன்ற அளவு நீக்க
முயன்று, செவ்வையான அருங்குணம் படைத்த ஆண்டவனே அவதரித்து
வந்து அதை முற்றிலும் தீர்க்க விருப்பம் பூண்டு, அவன் இன்னும்
வாராமையால், அருங்குணம் படைத்த தவத்தோன் மனம் நொந்து சோர்வான்.
சென்று
- வந்து: செல்லுதலை 'வருதல்' என்ற பொருளிலும், 'எம்'
என்பதனை 'நம்' என்ற பொருளிலும், 'காய்' என்பதனைக் 'கனி' என்ற
பொருளிலும் வேறுபாடில்லாது வழங்குதல் முனிவர் மரபு. |