பக்கம் எண் :

முதற் காண்டம்178

                   2
உலகுண் டாயகால் மனுக்குலத் தலையவ னுண்ட
விலகுண் டாயகாய் விளைத்ததீ துயிரெலாஞ் சிதைப்ப
வலகுண் டாயிலா தடும்விடங் குடித்தாய் வழியா
லிலகுண் டாயின வெலாவுறுப் புலவென வுலவாம்.
 
உலகு உண்டாய கால் மனுக் குலத் தலையவன் உண்ட
விலகு உண்டு ஆய காய் விளைத்த தீது, உயிர் எலாம் சிதைப்ப
அலகு உண்டு ஆய் இலாது, அடும் விடம் குடித்த வாய் வழியால்
இலகு உண்டு ஆயின எலா உறுப்பு உலவு என உலவு ஆம்.  

     உலகம் உண்டாகிய காலத்தில் மனித குலத்து முதல்வனாகிய ஆதன்
உண்ட விலக்கப்பட்ட கனி விளைவித்த பாவம், தொடர்ந்து வரும் மனித
உயிர்களையெல்லாம் சிதைக்குமாறு, அளவு உண்டென்ற தன்மை இல்லாமல்,
கொல்லும் தன்மையுள்ள நஞ்சு குடித்த வாயின் வழியாக அதனோடு சேர்ந்து
விளங்கும் தன்மை கொண்டுள்ள உறுப்புகளில் எல்லாம் சென்று உலவுவது
போல, அவ்வுயிர்களிடமெல்லாம் உலவுவதாகும்.

     மனுக்குலத் தலைவன் உண்ட கனி, அதனால் விளைந்த தீது பற்றிய
செய்திகள் 27 வது, ஞாபகப் படலம் 108-121 பாடல்கள் கொண்டு தெளிக.
 
                  3
குடித்த நஞ்சினாற் குருடுகண் பாயெனப் பாவம்
முடித்த நஞ்சினால் முதிர்செயிர்க் குளத்திருண் மொய்ப்பப்
படித்த விஞ்சையாற் பணிந்தமெய் யிறைவனைப் பழித்துப்
பிடித்த வஞ்சனாற் பெருகிய தெங்கணு மருளே.
 
குடித்த நஞ்சினால் குருடு கண் பாய் என, பாவம்
முடித்த நஞ்சினால் முதிர் செயிர்க்கு உளத்து இருள் மொய்ப்ப,
படித்த விஞ்சையால் பணிந்த மெய் இறைவனைப் பழித்து,
பிடித்த வஞ்சினால் பெருகியது எங்கணும் மருளே.