குடித்த நஞ்சினால்
கண்ணில் குருடு பரவியது போல், பாவத்தைச்
செய்து முடித்தலாகிய நஞ்சினால் முதிர்ந்த அந்தக் கறையின் அளவுக்குத்
தக்கபடி உள்ளத்திலே இருள் மொய்க்கவே, படித்த வேதநூற் கல்வியினால்
முன் பணிந்து தொழுத மெய்யான ஆண்டவனைப் பின் பழிக்கத் தொடங்கி,
பற்றென்று பிடித்துக் கொண்ட வஞ்சகனாகிய பேயினால் எங்கும் மயக்கமே
பெருகியது.
4 |
பண்ண
ருஞ்சுடர்ப் பருதிபோய்ப் பாயிரு ணீக்க
வெண்ண ருஞ்சுட ரேற்றுவ ரிணையென மாக்க
ளொண்ண ருஞ்சுட ரோரிறை யவனொளித் தெவையும்
மண்ண ருஞ்சுடர் மானுமென் றிறைஞ்சவுள் ளினரால். |
|
பண்
அருஞ் சுடர்ப் பருதி போய், பாய் இருள் நீக்க
எண் அருஞ் சுடர் ஏற்றுவர் இணை என, மாக்கள்
ஒண் அருஞ் சடர் ஓர் இறையவன் ஒளித்து, எவையும்
மண் அருஞ் சுடர் மானும் என்று இறைஞ்ச உள்ளினர் ஆல். |
செய்வதற்கு
அரிய சுடரொளி கொண்ட கதிரவன் மறைந்து
போகவே, எங்கும் பரவிய இருளை நீக்குமாறு எண்ணற்கரிய
விளக்குகளை ஏற்றுபவர்க்கு ஒப்பாக, மக்கள் ஒளியுள்ள அரிய சுடராகிய
ஒரே ஆண்டவனே மறைத்து விட்டு, அழகு செய்தற்கு அரிய சுடருக்கு
ஒப்பாகுமென்று எப்பொருளையும் தெய்வமாக வணங்கக் கருதினர்.
'ஆல்' அசை
நிலை.
5 |
மறமொ
ழித்திலர் மறைமுறை யொழித்தன ரிறைவன்
றிறமொ ழித்தனர் செய்முறை யொழித்தனர் சிறந்த
வறமொ ழித்தன ரறிவொழித் தனர்நலம் யாவும்
புறமொ ழித்தனர் புணருயி ரொழித்தனர் சிதடர். |
|
மறம்
ஒழித்திலர்; மறை முறை ஒழித்தனர்; இறைவன்
திறம் ஒழித்தனர்; செய்முறை ஒழித்தனர்; சிறந்த
அறம் ஒழித்தனர்; அறிவு ஒழித்தனர் நலம் யாவும்
புறம் ஒழித்தனர்; புணர் உயிர் ஒழித்தனர் சிதடர். |
|