அக்குருடர்
பாவத்தை ஒழித்திலர்; வேத முறைகளையெல்லாம்
ஒழித்தனர்; இறைவனின் உண்மை இயல்பை மறைத்து ஒழித்தனர்; செய்யும்
வழிபாட்டு முறைகளையும் ஒழித்தனர்; சிறந்த புண்ணியங்களையும் ஒழித்தனர்;
அறிவை ஒழித்தனர்; நன்மை யாவற்றையும் ஒழித்துப் புறத்தே தள்ளினர்;
இவ்வாறு உடலோடு பொருந்தியுள்ள ஆன்மாவைக் கெடுத்து ஒழித்தனர்.
6 |
எஞ்சு
கப்பய னியற்றிய வறங்களே யின்னா
விஞ்சு கப்பகை வினைசெயும் பழம்பழிப் பேயந்
நஞ்சு கப்பகு வாயர வுருக்கொடந் நாளி
லஞ்சு கப்புவி யனைத்துமே தோன்றிய தாமால். |
|
எஞ்சுகப்
பயன் இயற்றிய அறங்களே, இன்னா
விஞ்சுக, பகை வினை செயும் பழம் பழிப் பேய், அந்
நஞ்சு உக, பகு வாய் அரவு உருக் கொடு அந்நாளில்
அஞ்சுகப் புவி அனைத்துமே, தோன்றியது ஆம் ஆல். |
பயன்
தந்த அறங்களெல்லாம் குறைபடவும், துன்பம் பெருகவும்,
மனிதரைப் பகைக்கும் வினையைத் தொடர்ந்து செய்யும் பழைய பழியை
விளைவித்த பேய், அந்நஞ்சு எங்கும் சிந்திப் பரவுமாறு, அந்நாளில் உலகம்
அனைத்துமே அஞ்சும் வகையில், திறந்த வாயுள்ள பாம்பின் உருவம்
கொண்டு தோன்றியது.
ஆம், ஆல் இரண்டும்
அசைகள். எஞ்சுக, விஞ்சுக அஞ்சுக- எஞ்ச,
விஞ்ச, அஞ்ச என்ற வினையெச்சங்கள் இடையே 'உக' என்ற சாரியை பெற்று
விரிந்து நின்றன. பேய் பாம்பின் உருவமாக எங்கும் வணங்கப்பட்டதை
உலகெங்கம் தோன்றியதாகக் குறித்தார் என்க.
7
|
அன்ன
நஞ்சுறும் பாவமே பரந்ததி னதனை
யுன்னி னஞ்சுறு முன்னிய வுன்னிய மதனைப்
பன்னி னஞ்சுறும் பன்னிய வாயது மதனைத்
துன்னி னஞ்சுறுந் துன்னிய திசையெலா மன்றோ. |
|