பக்கம் எண் :

முதற் காண்டம்181

அன்ன நஞ்சு உறும் பாவமே பரந்ததின், அதனை
உன்னின், நஞ்சு உறும் உன்னிய உன்னமும்; அதனைப்
பன்னின், நஞ்சு உறும் பன்னிய வாய் அதும்; அதனைத்
துன்னின், நஞ்சு உறும் துன்னிய திசை எலாம் அன்றோ. 

     அத்தகைய நஞ்சை விளைவிக்கும் பாவமே எங்கும் பரந்து
கிடந்தமையால், அதனை நினைந்தால் நினைந்த நினைவும் நஞ்சாகி விடும்;
அதனைப் பற்றிச் சொன்னால், சொல்லிய வாயுமே நஞ்சாகிவிடும்; தேனை
அணுகினால், அணுகிய திசையெல்லாம் நஞ்சாகி விடும்.

     'அன்றோ' அசைநிலை.

 
                  8
நிழலி னஞ்சுறும் வெய்யிலி னஞ்சுறு நெடுநீர்க்
கழனி நஞ்சுறுங் கடிமலர் நஞ்சுறும் பொலிந்த
பொழிலி னஞ்சுறும் புணர்கனி நஞ்சுறு மடவா
ரெழிலி னஞ்சுறுங் காண்டலா லின்னுயி ரிறக்கும்.
 
நிழலின் நஞ்சு உறும்; வெய்யிலில் நஞ்சு உறும். நெடு நீர்க்
கழனி நஞ்சு உறும்; கடி மலர் நஞ்சு உறும். பொலிந்த
பொழிலில் நஞ்சு உறும்; புணர் கனி நஞ்சு உறும். மடவார்
எழிலில் நஞ்சு உறும்; காண்டலால் இன் உயிர் இறக்கும்.  

     நிழலில் நஞ்சு பொருந்திக் கிடக்கும்; வெயிலிலும் நஞ்சு பொருந்திக்
கிடக்கும். நீருள்ள நெடிய வயல் நஞ்சாகிவிடும்; மணமுள்ள மலரும்
நஞ்சாகிவிடும்; அழகிய சோலையில் நஞ்சு பொருந்திக் கிடக்கும்; மரங்களிற்
பொருந்திய கனியும் நஞ்சாகி விடும். மகளிர்தம் அழகிலே நஞ்சு பொருந்திக்
கிடக்கும்; அந் நஞ்சைப் பார்ப்பதாலேயே இனிய உயிர் இறந்துபடும்.

                 9
காரு நஞ்செனக் கனலியு நஞ்சென மாரி
சோரு நஞ்செனத் துறும்வளி நஞ்செனச் சுடர்ப்பூ
ணாரு நஞ்சென வாடைநஞ் சுணவுநஞ் சமிர்த
நீரு நஞ்சென நேமிகொள் ளெவையுநஞ் செனவே.