பக்கம் எண் :

முதற் காண்டம்182

காரும் நஞ்சு என, கனலியும் நஞ்சு என, மாரி
சோரும் நஞ்சு என, துறும் வளி நஞ்சு என, சுடர்ப் பூண்
ஆரும் நஞ்சு என, ஆடை நஞ்சு, உணவு நஞ்சு, அமிர்த
நீரும் நஞ்சு என, நேமி கொள் எவையும் நஞ்சு எனவே. 

     கருமேகமும் நஞ்சாகவும், கதிரவனும் நஞ்சாகவும், சொரியும் மழை
நஞ்சாகவும், நெருங்கும் காற்றும் நஞ்சாகவும், ஒளி பொருந்திய செறிந்த
அணிகளும் நஞ்சாகவும், ஆடையும் நஞ்சு, உணவும் நஞ்சு,
அமிழ்தமெனப்படும் நீரும் நஞ்சாகவும், உலகம் கொண்டுள்ள யாவும்
நஞ்சாகமாறிவிடும்.

     'மாறி விடும்' என்ற தொடர் வருவித்து முடிக்கப்பட்டது. "வான்நின்று
உலகம் வழங்கி வருதலால், தான் அமிழ்தம என்று உணரற்பாற்று", என்ற
குறள் (11) நீரை அமுதமாகக் கொள்ளுதல் காண்க.
 
                   10
நஞ்செஞ் சாமையி னடுநெறி தவிர்தலோ டின்னா
விஞ்செஞ் சாமையின் சிறுமைநோய் துயர்பிணி மிடைந்து
நெஞ்செஞ் சாமலு நெடியதோர் நடுக்குறா நிற்ப
மஞ்செஞ் சாமலு மருண்டிருண் டழிந்தன வுலகம்.
 
நஞ்சு எஞ்சாமையின் நடுநெறி தவிர்தலோடு, இன்னா
விஞ்சு எஞ்சாமையின் சிறுமை நோய் துயர் பிணிமிடைந்து,
நெஞ்சு எஞ்சாமலும் நெடியது ஓர் நடுக்கு உறா நிற்ப,
மஞ்சு எஞ்சாமலும் மருண்டு இருண்டு அழிந்தன உலகம்.  

     பாவ நஞ்சு குறையாமையால் நீதி நெறி தவிர்தலோடு, பாவம்
மேலோங்குதல் குறையாமையால் சிறுமையும் துன்பமும் துயரமும் நோயும்
செறிந்து, மக்கள் நெஞ்சு குறைதலின்றி நெடியதொரு நடுக்கம் கொண்டு
நிற்க, இருள் குறையாமையாலும் உலகப் பகுதிகளெல்லாம் மயங்கி இருண்டு
அழிந்தன.

 
               11
மீன்ம றந்தன மேதினி விளக்கலும் வெய்ய
வான்ம றந்தன மாரியை வழங்கலு மதுரத்
தேன்ம றந்தன செழுமலர் பெய்தலும் வேத
நூன்ம றந்தனர் நுதலருந் தீமைசெய் தமையால்