மீன்
மறந்தன மேதினி விளக்கலம்; வெய்ய
வான் மறந்தன மாரியை வழங்கலும்; மதுரத்
தேன் மறந்தன செழு மலர் பெய்தலும், வேத
நூல் மறந்தனர் நுதல் அருந் தீமை செய்தமையால். |
வேத நூலை மறந்த
மக்கள் கருதற்கு அரிய பாவங்களைச்
செய்தமையால், விண்மீன்கள் உலகத்திற்கு ஒளி தருதலையும் மறந்தன;
விரும்பத் தக்க மேகங்கள் மழை வழங்கவும் மறந்தன; செழுமையான
மலர்கள் தேனைப் பொழிதலும் மறந்தன.
12 |
அறம
டிந்தன வடைந்தன தீயவை யனைத்தும்
மறமி டைந்தன மறந்தன தருமமே வஞ்சத்
திறநி றைந்தன தீர்ந்தன தவங்களே விரதம்
புறமு ரிந்தன பொதிர்ந்தன பகைசெயும் புரையே |
|
அறம்
மடிந்தன;அடைந்தன
தீயவை அனைத்தும்;
மறம் மிடைந்தன; மறந்தன தருமமே; வஞ்சத்
திறம் நிறைந்தன; தீர்ந்தன தவங்களே; விரதம்
புறம் முரிந்தன; பொதிர்ந்தன பகை செயும் புரையே. |
புண்ணியங்கள்
மடிந்தன; தீயவை யாவும் வந்து அடைந்தன;
பாவங்கள் செறிந்தன; தருமங்கள் மறக்கப்பட்டன; வஞ்சகத் திறமைகள்
நிறைந்தன; தவங்கள் நின்று போயின; விரதங்கள் புறத்தே சென்று
அழிந்தன; பகை செய்யும் குற்றங்கள் குவிந்தன.
13 |
விண்கி
ழித்திழி வெள்ளநீர் சிறைசேயு முழுநர்
மண்கி ழித்துழ வழங்கிய கொழுவினை நீட்டிப்
புண்கி ழித்துநெய்ப் புனலொடு போர்முகத் தஞ்சா
கண்கி ழித்தொளி கான்றவே லாக்கின பகையே. |
|
விண்
கிழித்து இழி வெள்ள நீர் சிறை செயும் உழுநர்
மண் கிழித்து உழ வழங்கிய கொழுவினை நீட்டி,
புண் கிழித்து நெய்ப் புனலொடு போர் முகத்து அஞ்சா
கண் கிழித்து ஒளி கான்ற வேல் ஆக்கின பகையே |
|