எங்கும் பெருகிய
பகைகள், மேகத்தைக் கிழித்த தன்மையாய்ப்
பொழியும் மழை வெள்ளத்தை வயல்களில் மறித்து நிறுத்தும் உழவர்
மண்ணைக்கிழித்து உழுவதற்குப் பயன்படுத்திய கொழுவை அடித்து நீட்டி,
போர்க்களத்தில் அஞ்சாமல் எதிரிகள் உடலைப் புண்படக் கிழித்து
அவ்வுதிர நீரோடு கலந்து, பார்ப்பவர் கண்களைக் கூசச் செய்யும் ஒளியைக்
கக்கிய வேலாக மாற்றின.
14 |
அன்பு
மில்லன வெனதுன தென்பதி லார்வ
நன்பு மில்லன வஞ்சனை கற்கலா னன்னூல்
பின்பு மில்லன தீயவை யினிதெனப் பெட்டற்
கின்பு மில்லன விச்சையால் வறுமையுள் ளதுவே. |
|
அன்பும்
இல்லன, எனது உனது என்பதில் ஆர்வ
நன்பும் இல்லன. வஞ்சனை கற்கலால் நல்நூல்
பின்பும் இல்லன, தீயவை இனிது எனப் பெட்டற்கு
இன்பும் இல்லன, இச்சையால் வறுமை உள்ளதுவே |
அன்பும் இல்லாது
போய், இது எனது அது உனது என்று வேற்றுமை
பாராட்டுதலால் ஆர்வம் கலந்த நன்மையும் இல்லாத போது, வஞ்சனையே
கற்றுப் பழகுவதனால் நல்ல நூல்களைப் பின்பற்றுதலும் இல்லாது போய்,
தீயவற்றை இனிது என விரும்புதலால் இன்பமும் இல்லாது போய், ஆசையால்
வறுமையே எஞ்சியுள்ளது.
15 |
கரும்பு
லாவிய சாறில காய்ந்தன வாலை
யரும்பு லாவிய வமுதில வழுதன கமலஞ்
சுரும்பு லாவயல் பயனில துறுவின கடுமுள்
விரும்பு தேனுணாப் பாடில விம்மின குயிலே |
|
கரும்பு
உலாவிய சாறு இல காய்ந்தன ஆலை.
அரும்பு உலாவிய அமுது இல அழுதன கமலம்.
சுரும்பு உலா வயல் பயன் இல துறுவின கடுமுள்.
விரும்பு தேன் உணா பாடில விம்மின குயிலே. |
|