கரும்பினுள்
பொருந்திய சாறு இல்லாமையால் ஆலைகள் காய்ந்தன.
அரும்புகளில் பொருந்திய தேன் இல்லாமையால் தாமரைகள் அழுதன.
வண்டுகள் உலாவும் வயல்கள் விளைச்சற் பயன் இல்லாமல் கொடிய
முட்செடிகள் மண்டிக் கிடந்தன. தாம் விரும்பிய தேன் உண்ணக்
கிடையாமையால் குயில்கள் பாடுதலின்றிப் புலம்பின.
கடவுள்
அவதரிக்கச் சூசை வேண்டல்
-மா, -மா,
--காய், -மா, -மா, --காய்
16 |
எள்ள
லாய மன்னுயிர்க ளின்னா வினிதென் றதைவிரும்பி
யள்ள லாய விருண்மொய்ப்ப வவனி யெங்கு மொய்த்தன தீ
துள்ள லாய தருமமதோ வுள்ளி யுள்ளத் திரங்கிவளன்
வள்ள லாய விறையவனை வணங்கி வருந்தி யுரைவகுத்தான். |
|
எள்ளல்
ஆய மன் உயிர்கள் இன்னா இனிது என்று அதை
விரும்பி, அள்ளல் ஆய இருள் மொய்ப்ப, அவனி எங்கும்
மொய்த்தன தீது
உள்ளல் ஆய தருமம் அதோ? உள்ளி உள்ளத்து இரங்கி வளன்,
வள்ளல் ஆய இறையவனை வணங்கி, வருந்தி உரை வகுத்தான்: |
இழிவு கொண்ட
மனித உயிர்கள் பாவம் இனியதென்று அதையே
விரும்பிச் செய்து, அள்ளிக் கொள்ளத்தக்க அளவிற்றுப் பாவம் என்னும்
இருள் மொய்த்தமையால், உலக மெங்கும் மொய்த்த தீமை கருதத்தக்க
அளவில் அடங்குவதோ? வளன் இதனை நினைந்து, மனத்துள் இரங்கி,
வள்ளலாகிய ஆண்டவனை வணங்கி, வருந்திப் பின்வருமாறு சொல்லாத்
தொடங்கினான்:
17 |
ஒன்றா
யாளு மரசேயென் னுயிர்க்கோர் நிலையே
தயைக்கடலே
குன்றா வொளியே யருட்பரனே குணுங்கீங் கோச்சுங்
கொடுங் கோன்மை
பின்றா வினைசெய் வதுநன்றோ பிறந்தப் பகையைத்
தீர்த்தளிப்பச்
சென்றா லாகா தோவிரக்கஞ் செய்யக் குணித்த நாளெவனே. |
|