"ஒன்றாய் ஆளும்
அரசே, என் உயிர்க்கு ஓர் நிலையே,
தயைக் கடலே,
குன்றா ஒளியே, அருட் பரனே, குணுங்கு ஈங்கு ஓச்சும்
கொடுங்கோன்மை
பின்றா வினை செய்வது நன்றோ? பிறந்து அப் பகையைத்
தீர்த்து அளிப்பச்
சென்றால், ஆகாதோ? இரக்கஞ் செய்யக் குணித்த நாள் எவனே?- |
"உலகங்களையெல்லாம்
ஒன்றாய் நின்று ஆளும் அரசனே, என்
உயிருக்கு ஒப்பற்ற நிலைப்பிடமே, அன்புக் கடலே, குறையாத ஒளியே,
அருளுள்ள ஆண்டவனே, பேய் இவ்வுலகில் நடத்தும் தன்
கொடுங்கோன்மையால் தோல்வியற்ற தீவினையைச் செய்துகொண்டிருக்க
விடுதல் நல்லதோ? அப்பகையைத் தீர்த்து மக்களைக் காக்க நீயே
இவ்வுலகில் பிறந்து வந்தால், ஆகாதோ? எங்களுக்கு இரக்கஞ் செய்ய நீ
கருதிய நாள்தான் எதுவோ?"
18 |
மறையைப்
பழித்த பொய்மதெங்கள் மருட்டும் வினையா
லொண்டவத்தின்
முறையைப் பழித்த சிற்றின்ப மூழ்கு நசையா லென்னுமிதோ
வுறையைப் பழித்த வெண்ணலமன் னுயிர்க ளெரிதீ
நரகெய்தத்
தறையைப் பழித்த பேயினங்கள் தவிரா தீங்காள்
வதுநன்றோ. |
|
"மறையைப் பழித்த
பொய் மதங்கள் மருட்டும் வினையால்,
ஒண்தவத்தின்
முறையைப் பழித்த சிற்றின்பம் மூழ்கும் நசையால், என்றும் இதோ
உறையைப் பழித்த எண்இல மன் உயிர்கள் எரிதீ நரகு எய்த,
தறையைப் பழித்த பேய் இனங்கள் தவிராது ஈங்கு ஆள்வது
நன்றோ?" |
"மெய்
வேதத்தைப் பழித்த பொய் மதங்கள் மயக்கும் செயலால், ஒளி
பொருந்திய தவத்தின் முறையைப் பழித்த தன்மையாய்ச் சிற்றின்பத்தில்
மூழ்கும் ஆசைக்கு உட்பட்டு, இதோ! மழைத்துளிகளிலும் மிஞ்சிய
எண்ணில்லாத மனித உயிர்கள் எந்நாளும் எரியும் நெருப்புள்ள நரகத்தில் |