20 |
தந்தை
நோக வுணர்வின்றித் தவறா நின்ற பிள்ளைகடஞ்
சிந்தை நோகப் பணிந்தடுத்தாற் சினந்த தாதை யகற்றுவனோ
நிந்தை யாகப் பிழைத்தெனினு நினக்கோர் பிள்ளை யாகவெமக்
கெந்தை யாக நீ யென்று யிரங்கா முனிவ தாங்கொல்லோ |
|
"தந்தை
நோக, உணர்வு இன்றி, தவறாநின்ற பிள்ளைகள், தம்
சிந்தை நோகப் பணிந்து அடுத்தால், சினந்த தாதை அகற்றுவனோ?
நிந்தை ஆகப் பிழைத்து எனினும், நினக்கு ஓர் பிள்ளை ஆக, எமக்கு
எந்தை ஆக நீ, என்றும் இரங்கா முனிவது ஆம்கொல்லோ?" |
"அறிவின்றி,
தந்தை நோகுமாறு தவறு செய்கின்ற பிள்ளைகள், பின்
தம் மனம் வருந்திப் பணிந்து வந்து அடுத்தால், முன் சினம் கொண்டிருந்த
தந்தை அப்பொழுதும் அவர்களை அகற்றுவானோ? நிந்தித்த தன்மையாக
மீண்டும் மீண்டும் பிழை செய்தோமெனினும், யாம் உனக்கு ஒப்பற்ற
பிள்ளைகளாகவும், நீ எமக்கு எம் தந்தையாகவும் இருக்கக்கொள்ள, என்றும்
இரங்காது வெறுப்பது தகுதி ஆகுமோ?"
தவறாகின்ற
- தவறுகின்ற: 'ஆநின்று' நிகழ்கால இடை நிலை.
'ஆங்கொல்லோ' என்றவிடத்து இடையே நின்ற 'கொல்' அசைநிலை.
21 |
பொறியைத்
தவிர்த்த மாதவத்தோர்
புலம்பற் கிரங்கிற் குறையென்னோ
வறியைத் தவிர்த்த குழவிகளு
மழுதற் கினைந்தாற் றீதெனவோ
நெறியைத் தவிர்த்த வஞ்சமிக
நேமி சிதைத்தாள் கொடுங்கோன்மை
வெறியைத் தவிர்த்த வயங்கொடுநீ
வினைதீர்த் துதிப்பத் தடையென்னோ |
|