பக்கம் எண் :

முதற் காண்டம்189

பொறியைத் தவிர்த்த மா தவத்தோர் புலம்பற்கு இரங்கின்
                                       குறை என்னோ?
அறியைத் தவிர்த்த குழவிகளும் அழுதற்கு இனைந்தால் தீது
                                       எனவோ?
நெறியைத் தவிர்த்த வஞ்சம் மிக நேமி சிதைத்து ஆள்
                                       கொடுங்கோன்மை
வெறியைத் தவிர்த்த வயம் கொடு நீ வினைதீர்த்து உதிப்பத்
                                       தடை என்னோ?"

     "ஐம்பொறிகளின் ஆசையைத் தவிர்த்து அடக்கிய பெருந்தவத்தோர்
புலம்பலைக் கேட்டு நீ இரங்கி வந்து அவதரித்தால் ஏற்படும் குறையாதோ?
பாவ புண்ணியங்களை அறியும் தன்மையுமற்ற குழந்தைகளும் அழுவதைக்
கேட்டு இரங்கினால் ஏற்படும் தீது என்னவோ? நன்னெறியைக் கெடுத்த தன்
வஞ்சகமே மேலோங்குமாறு உலகத்தைச் சிதைத்து ஆளும் கொடுங்கோன்மை
பூண்ட பேயை அழிக்கக்கூடிய வல்லமை கொண்டு, எங்கள் பாவ
வினையைப் போக்கும்படியாக நீ வந்து பிறக்கத் தடையாய் இருப்பது
என்னவோ?

     பாவிகளின் பாவங்களையெல்லாம் போக்கவென்று பிறக்காவிடினும்,
மாதவத்தோரும் மாசற்ற குழந்தைகளும் தம்மைத் தொடர்ந்து வரும் ஆதிப்
பாவத்தினின்று மீட்புப் பெறவேனும் ஆண்டவன் வந்து பிறக்க
வேண்டுமென்பது கருத்து. பிறந்தால் வினைதீர்வது உறுதியென்ற கருத்தால்,
'வினை தீர்த்து உதிப்ப' என இறந்த காலத்தாற் கூறப்பட்டது.

 
                     22
கன்னித் தாய்தன் கரத்துன்னைக் கண்டுள் ளுவப்ப
                         வுன்மலர்த்தாள்
சென்னித் தாரென் றணிந்திலங்கச் சிறுவ னாய்நீ
                         யமுதுணுங்கால்
துன்னித் தாழ்ந்து தொழவுன்றீஞ் சுவையார் குதலைச்
                         சொற்கேட்ப
வென்னிற் றாழ்வுண் டாயினுமென் னிறைவா வடியேற்
                         கருள் கென்பான்.