பக்கம் எண் :

முதற் காண்டம்190

"கன்னித்தாய் தன் கரத்து உன்னைக் கண்டு உள் உவப்ப, உன்
மலர்த் தாள் சென்னித் தார் என்று அணிந்து இலங்க, சிறுவனாய்
                                     நீ அழுது உணுங்கால்
துன்னித் தாழந்து தொழ, உன் தீம் சுவை ஆர் குதலைச் சொல்
                                     கேட்ப
என்னில் தாழ்வு உண்டு ஆயினும், என் இறைவா, அடியேற்கு
                                     அருள்க." என்றான்.

     "என் இறைவனே, உன்னைப் பெறவிருக்கும் கன்னித் தாயின் கையில்
உன்னைக் கண்டு உள்ளம் மகிழவும், உன் மலர் போன்ற அடிகளை என்
தலைக்கு மாலையாக அணிந்து சிறக்கவும், சிறுவனாய் பால் உண்ணும்
போது உன்னை நெருங்கிப் பணிந்து தொழவும், இனிய சுவை நிறைந்த உன்
மழலைச் சொல்லைக் கேட்கவும், என்னிடம் தகுதிக் குறைவு எவ்வளவு தான்
இருப்பினும் பொருட்படுத்தாமல், அடியேனுக்கு அருள் வாயாக."
என்றெல்லாம் சூசை வேண்டினான்.

     'அருள்கவென்பான்' என்பது தொகுத்தல் விகாரமாக, அருள்
கென்பான்' என்று வந்தது.

     கன்னித்தாய் : "இதோ கன்னிப் பெண் கருத்தாங்கி ஒரு மகனைப்
பெற்றெடுப்பாள்" (இசை. 7 : 14).
 
                    23
இன்னா னின்ன யாவுமுரைத் தேங்கி யேங்கி யழுகின்ற
வன்னா ளன்ன வுரைக்கிசையா யன்பு தூண்டு மரியநசை
தன்னா லுன்னப் பொருவற்ற தரும கன்னி மதியென்பாள்
பன்னா டுன்னா தருட்புரியப் பரம னெய்த வேண்டினளே
 
இன்னான் இன்ன யாவும் உரைத்து ஏங்கி ஏங்கி அழுகின்ற
அந்நாள், அன்ன உரைக்கு இசையாய், அன்பு தூண்டும் அரிய
நசை தன்னால், உன்னப் பொருவு அற்ற தரும கன்னி மரி என்பாள்,
பல் நாள் துன்னாத அருள் புரியப் பரமன் எய்த வேண்டினளே.