| இவன்
இவையெல்லாம் சொல்லி ஏங்கியெங்கி அழுகின்ற அதே
நாளில், தனக்கு ஒப்பு நினைக்கவும் யாரும் இல்லாத புண்ணியச் சிறப்பு
வாய்ந்த கன்னியாகிய மரி என்பவள், அந்த உரைக்கு இசைவாக, அன்பு
தூண்டியெழுப்பும் அரிய ஆசையால், பல காலமாக மனிதர் அடையாத
அருளைப் புரியுமாறு ஆண்டவனே பிறந்து இவ்வுலகை வந்தடைய
வேண்டினாள்.
துன்னாத + அருள்
- 'துன்னாதவருள்' என வர வேண்டியது
'துன்னாதருள்' எனத் தொகுத்தல் விகாரமாயிற்று.
| 24
|
அன்றென்
றொடையா லடையாப்பண் பன்னா ரிருவர்
சொல்லமிர்தந்
துன்றென் றிருதற் செவியுவப்பத் தொடர்பிற் கேட்ட
வானிறையோ
னன்றென் றிரங்கி யுலகளிப்ப நரனா வதற்கே யுதவியிவ
ரொன்றென் றிவரை மணத்தொன்ற வுள்ளத் துள்ளி
முடித்தானால். |
| |
அன்று,
என் தொடையால் அடையாப் பண்பு அன்னார்
இருவர் சொல் அமிர்தம்
துன்று என்று இரு தன் செவி உவப்பத் தொடர்பின் கேட்ட வான்
இறையோன்,
நன்று என்று இரங்கி, உலகு அளிப்ப நரன் ஆவதற்கே
உதவி இவர்
ஒன்று என்று இவரை மணத்து ஒன்ற உள்ளத்து உள்ளி
முடித்தான் ஆல். |
அதே நாளில்,
என் பாவினால் எட்ட இயலாத நற்பண்பு கொண்ட
அவ்விருவர் தம் சொல்லாகிய அமிழ்தம் நெருங்கி வந்தாற்போல் தன்
இரு செவிகளும் மகிழ அன்போடு கேட்டவனாகக் கடவுள், நல்லதென்று
இரக்கங் கொண்டு, உலகத்தை மீட்டுக் காக்கத் தான் ஒரு மனிதனாய்
அவதரிப்பதற்கு இவ்விருவர் உதவி இன்றியமையாத ஒன்று என்று மதித்து,
இவரைத் திருமணத்தால் இணைக்கத் தன் உள்ளத்தில் நினைந்து முடிவு
கொண்டான்.
'ஆல்'
அசைநிலை. தொடை - தொடையாலாகிய பாவுக்கு ஆகுபெயர்.
|