|
25
|
அணையற்
றகன்ற பவவெள்ளத் தமிழ்ந்து முயிர்க
டங்குறைதீர்த்
திணையற் றகன்ற வருட் பவ்வத் தினிதின் மூழ்கி
யுய்வதற்கே
தணையற் றகன்ற தயைக்கடவுள் தனித்தான் செய்யுந்
தொழிலெனினுந்
துணையற் றகன்ற மாண்பிவரைத் துணையாயச் சேர்த்த
நலஞ் சொல்வாம். |
| |
அணை அற்று அகன்ற
பவ வெள்ளத்து அமிழ்ந்தும் உயிர்கள்
தம் குறைதீர்த்து,
இணை அற்று அகன்ற அருள் பவ்வத்து இனிதின் மூழ்கி
உய்வதற்கே,
தணை அற்று அகன்ற தயைக் கடவுள் தனித் தான் செய்யும்
தொழில் எனினும்,
துணை அற்று அகன்ற மாண்பு இவரைத் துணையாய்ச் சேர்த்த
நலம் சொல்வாம். |
கரையில்லாது
அகன்று கிடந்த பாவ வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கும்
மனித உயிர்களின் குறையைப் போக்கி, ஒப்பற்று விரிந்து கிடந்த தெய்வ
அருளாகிய கடலில் இன்பமாக மூழ்கி வாழ்வு பெறுவதற்கு, எல்லையற்றுப்
பரந்த தயவுள்ள கடவுள் தானே தனியாகச் செய்து முடிக்க வேண்டிய
தொழில் அது வாயினும், ஒப்பற்று விரிந்து கிடந்த மாண்புள்ள
இவ்விருவரையும் துணையாகச் சேர்த்துக் கொண்ட நலம் பற்றிய செய்திகளை
இனி எடுத்துச் சொல்வோம்.
தணை
- 'தவணை' என்ற சொல்லின் இடைக்குறை.
கன்னிக்கு
வந்த மணத் தூது
-- காய், --
காய், -- காய், -- காய், - மா, தேமா
|
26
|
ஆரானு நிகர்ப்பரிய
வன்பார்ந்த நாயகன்றா னலகை வெல்லக்
காராரும் வானுலகு மண்ணுலகுங் கடிநயக்குங் கருணை கண்ணி
ஏராரு மணியிமைக்கு மெருசலே மாலயத்தி லிருமை வாய்ந்த
சீராருங் கன்னியின்கட் சேடமையோர் வானவனைச் செலுத்திச்
சொல்வான். |
|