பக்கம் எண் :

முதற் காண்டம்193

ஆர் ஆனும் நிகர்ப்பு அரிய அன்பு ஆர்ந்த நாயகன் தான்
                                    அலகை வெல்ல,
கார் ஆரும் வான் உலகும் மண் உலகும் கடி நயக்கும் கருணை
                                    கண்ணி,
ஏர் ஆரும் மணி இமைக்கும் எருசலேம் ஆலயத்தில் இருமை
                                    வாய்ந்த
சீர் ஆரும் கன்னியின்கண் சேடு அமை ஓர் வானவனைச்
                                    செலுத்திச் சொல்வான்:

     யாராலும் ஒப்பிடற்கு அரிய அன்பு நிறைந்த ஆண்டவன் தானே
பேயை வெல்ல வென்று, கருமேகம் நிறைந்த வானுலகமும் மண்ணுலகமும்
மிகவும் மகிழத் தக்க ஒரு கருணைச் செயலை நிகழ்த்தக் கருதி, அழகு
நிறைந்த மணிகள் மின்னும் எருசலேம் கோவிலில் பெருமை வாய்ந்து
இருந்த சிறப்புக்கள் நிறைந்த கன்னி மரியாளிடம் அழகு நிறைந்த ஒரு
வானவனைப் பின் வருமாறு சொல்லி அனுப்பி வைப்பான் :

     'செலுத்திச் சொல்வான்' என்றாரேனும், 'சொல்லிச் செலுத்துவான்'
என்று மாற்றிப் பொருள் கொள்க.
 
                      27
சேயாக மனுக்குலத்திற் சேர்ந்துதித்து வையகத்தார்
                                 சிதைவை நீக்கத்
தாயாக வளர்கன்னி தாய்வயிற்றிற் பழம் பழிசேர் தவறில்
                                 லாது
தூயாக மறிவாண்மை சுடர்காட்சி வலியருண்மாண் டுணிவு
                                 சூட்சி
வீயாத வரங்கொடுபெற் றெவ்வுலரும் வியப்பெய்த
                                 வேய்ந்தா ளன்றோ
 
"சேய் ஆக, மனுக் குலத்தில் சேர்ந்து உதித்து வையகத்தார்
                                       சிதைவை நீக்க,
தாயாக வளர் கன்னி, தாய் வயிற்றில் பழம் பழி சேர் தவறு
                                       இல்லாது,
தூய் ஆகம் ஆண்மை சுடர் காட்சி வலி அருள் மாண்
                                       துணிவு சூட்சி
வீயாத வரம் கொடு பெற்று எவ்வுலகும் வியப்பு எய்த
                                   வேய்ந்தாள் அன்றோ".