பக்கம் எண் :

முதற் காண்டம்195

     "போர்த்த வெய்யோன் . . . . . . பிறை . . . . . . மீன் முடி சூடி"
விண்ணகத்தில் அரியதோர் அருங்குறி தோன்றியது. பெண்ணொருத்தி
காணப்பட்டாள். அவள் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தாள்;
நிலவின்மேல் நின்று கொண்டிருந்தாள்; தலையின்மீது பன்னிரு
விண்மீன்களை முடியாகச் சூடியிருந்தாள்" (திருவெளிப்பாடு 12 : 1).
கடவுளின் திருச்சபையை உருவகமாகக் குறிப்பிடும் இப்பகுதி கன்னி
மரியாளுக்கும் பொருந்துவதாகக் கொண்டு போற்றுதல் திருச்சபை மரபு.
 
                        29
பிறையொக்கு மொளியன்னாள் பெருகுவய தொருமூன்றிற்
        
                     கோயிற் சேர்ந்து
மறையொக்கு மொளியன்னாள் வழுவிலநா டொறுமென்னை
        
                     வணங்கு மாற்றாற்
பொறையொக்குந் துணையன்னாள் பூவனத்தி னிற்பவருள்
        
                     பொலிந்த வானோர்
முறையொக்கு நிலையன்னாள் முற்றிவளர் வரத்தங்கண்
               
             முதிர்ந்தா ளன்றோ.
 
"பிறை ஒக்கும் ஒளி அன்னாள் பெருகும் வயது ஒரு மூன்றில்
                                      கோயில் சேர்ந்து
மறை ஒக்கும் ஒளி அன்னாள் வழுஇல நாள் தொறும் என்னை
                                      வணங்கும் ஆற்றல்
பொறை ஒக்கும் துணை அன்னாள், பூவனத்தில் நிற்பவருள்
                                      பொலிந்த வானோர்
முறை ஒக்கும் நிலை அன்னாள் முற்றி வளர் வரத்து அங்கண்
                                      முதிர்ந்தாள் அன்றோ."

     "பிறைபோலும் ஒளிகொண்ட அவள் வளர்ச்சி பெருகத் தொடங்கும்
மூன்று வயதிலேயே கோயிலை அடைந்தாள்: வேதமே போலும் ஒளி
படைத்த அவள் தவறாது நாள்தோறும் என்னை வணங்கும் தன்மையால்
இப்பூமிக்குப் பொருந்தும் துணை போன்றவள். இவ்வுவுகில் நிலைபெற்றுள்ள
மானிடருள் தான் யாவரினும் பொலிவுகொண்ட வானவர் முறைக்கு ஒத்து
விளங்கும் நிலைகொண்ட அவள் உடலால் பருவம் முதர்ந்து, வளர்ந்த
வரங்களால் அங்குப் புண்ணியங்களிலும் முதிர்ச்சி கொண்டு விளங்கினாள்."